பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

107


காத்திராமல், திறமையாகவும் தந்திரமாகவும் செயலாற்றி அவனைப் பிடித்துவிட்டார்கள்.

அமுதவல்லி அந்த ஆட்களைப் பாராட்டினாள். அவனைக் காண்பதற்காகக் கீழே வந்தாள். அவளைச் சேர்ந்தோர் அனைவரும் அங்கு கும்பலாய் மொய்த்து நின்றனர்.

பிடிப்பட்டவன் ஒரு பித்துக்குளிபோல - அரைவாசி அறிவு வளர்ச்சிபெற்ற மிருகம்போல-விகாரமான மனிதக் குரங்குபோல விசித்திரத் தோற்றம் உடையவனாகக் காணப்பட்டான். வெகு நேரம் வரை அவன் வாய் திறக்காமல் நின்றான். சிலர் அறை கொடுக்கவும், வேதனை தாளாமல் அலறிக்கொண்டு, உண்மையைக் கக்கினான்.

வேலைக்காரியின் மகனான அவனுக்கு அன்னக்கிளி மீது மோகம் ஏற்பட்டது. அவளை எப்படியும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு அவன் தோப்பில் பதுங்கித் திரிந்தான். அவ் வீட்டின் அருகிலேயே வசிக்க அவன் ஆசைப்பட்டதற்கு வேறொரு முக்கிய காரணமும். உண்டு. தனது ஆசைக் கிளியை அடிக்கடி கண்டுகளிக்க வாய்ப்புக்கள் ஏற்படும் அன்றோ?

அவன் கூற்றைக் கேட்டுப் பலரும் நகைத்தனர். அவனுக்காக அனுதாபப்பட்டனர் சிலர். உரிமையுடைய பணி மகளிர் சிலர் அன்னத்தைக் கேலிசெய்ய ஆசைப் பட்டனர். அவர்களது கழுத்து அப்படி இப்படி வளைந்தும், முகம் அங்கும் இங்கும் திரும்பியும், கண்கள் எங்கும் புரண்டும் பயன் இல்லாமல் போய்விட்டது. அன்னக்கிளி அங்கு காணப்படவில்லை. வெட்கம் அவளை வீட்டினுள் ஒரு மூலையில் முடக்கிப் போட்டிருக்கும் என்று எண்ணி, வரட்டும் வரட்டும்! எப்படியும் அவள் நம்மிடையே வந்து