பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அன்னக்கிளி


குற்றம் செய்திருக்கிறாய். அதுதான் தப்பி ஓடிவிட்டாய் என்று அவள் சாதிப்பதற்கு வசதியாகுமே' என்றான்.

'முக்கிய அலுவல் ஒன்று இருக்கிறது. அதை இதற்குள் மருதுபாண்டியன், முடித்திருப்பான். அவனைச் சந்திப்பதற்காகத்தான் நான் வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தேன்' என்று கூறிய திருமலை அவளை முதலில் குதிரை மீது அமர்த்திவிட்டு, அவனும் ஏறுவதற்குச் சித்தமானான்.

அதற்குள்ளாக மருதபாண்டியனும் இன்னும் பலரும் அந்த இடத்திற்கே வந்துவிட்டார்கள். 'கடமையை மறந்து காதலில் இறங்கிவிட்டாயே?" என்று கேட்பதுபோல், குறும்புத்தனம் ஒளிரும் பார்வையும் சிரிப்புமாக மருது தன் நண்பனை நோக்கினான்.

'இதோ, இந்த அன்னம் சின்ன வயசிலேயே சாவைத் தழுவக் கிளம்பிவிட்டாள். கடல், ஆந்தைபோன்ற கயவர்களின் முடிவிடமாக இருக்கவேண்டுமே தவிர, இவளைப் போன்றவர்களின் புகலிடமாக அமையலாமா? நல்ல வேளையாக நான் குறுக்கிட்டேன். இவள் பிழைத்தாள்!' என்று திருமலை சொன்னான்.

நண்பன் சிரித்தான். 'நீ என்று இவள் முகத்தில் கண் பதித்து மதிமயங்கி நின்றாயோ, அத் தருணம் முதலே அவள் வாழ்வில் பொன்மயமான புதுமை உதயமாகிவிட்டது!" என்றான். பிறகு தெரிவித்தான்:

'திருமாறனின் ஆட்கள் மரக்கலத்திலும் இருந்திருக்கிறார்கள். எயில் ஊர் ஆந்தையைக் கண்காணித்து, வேளை. வரட்டும் என்று காத்திருந்தனர்போலும். ஆந்தை கடலில்