பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அன்னக்கிளி

னவோ என்று தோன்றும் விதத்தில் அமைதி நிலவியது.தோட்டம் நிழலும் வெயிலும் செறிந்து ஒருவிதக் கவர்ச்சியோடு விளங்கியது.

அமுதவல்லியின் கண்கள் சட்டென்று ஏதோ ஒன்றின் அசைவினால் ஒரு மரத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டன. நன்கு போர்த்தியிருந்த ஓர் உருவம் அந்த மரத்தடியில் குனிந்து எதையோ எடுத்துக்கொண்டு வேகமாக மரங்களடர்ந்த பகுதிக்குள் சென்றதை அவள் கண்டாள்.அது யாராக இருக்கும், அவன் அவ்வாறு பதுங்கிப் பதுங்கிச் செல்லக் காரணம் என்ன? அவன் என்ன எடுத்துச் சென்றிருப்பான்? அப்படி யார் அவனுக்கு எதை மறைத்துக் கொடுத்திருக்க முடியும்?-அவள் மனம் பலப்பல கேள்விகளை எழுப்பியது.

பணியாளை ஏவி என்ன விஷயம் என்று அறியச் செய்யலாம் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. ஆளை அழைப்பதற்காக அவள் திரும்பியபோது ஒரு வேலைக்காரி வந்து வணங்கி நின்றாள். 'என்ன? என்று தலைவி நோக்கினாள் விசாரிக்கவும்.'திருமாறன் வந்திருக்கிறார் அம்மா!' என்று அறிவித்தாள் அவள்.

அமுதவல்லி மிகுந்த பரபரப்பு அடைந்தாள். அதனால் அவள் இதர விஷயங்களை மறந்து 'அவரை இங்கே வரச்சொல்!' என்று உத்தரவிட்டாள். கண்ணாடி முன் நின்று தனது முகத்தையும் ஆடைகளையும் சரி செய்வதில் அக்கறை காட்டினாள் அவள்.

8. அன்னத்துக்கு வந்த இன்னல்

திருமாறனைக் கண்டு விவரம் தெரிந்து வா என்று அமுதவல்லி கட்டளையிட்டதும் அன்னக்கிளி மறுத்