பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னக்கிளி

65

மாற்றத்தையும் வெளியே காட்டாது மறைக்க முயன்றவளாய், ‘எந்த முத்துமாலை?’ என்று விசாரித்தாள்.

‘நீயும் குழந்தை அல்ல - புரியாதது போல் பசப்புவதற்கு. நானும் ஏமாளி அல்ல - உனக்கு எதுவும் தெரியாது என்று எண்ணி விட’ என்றான் மாறன், உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத குரலில். ‘ பின்னே திடீரென்று முத்துமாலை என்று குறிப்பிட்டால்...?’

'மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த நாலு சரம் முத்து மாலையைத்தான் கேட்கிறேன் என்பது அமுதவல்லிப் பிராட்டியாருக்குப் புரியாமலா போய்விட்டது?'

'அது மன்னர் குடும்பத்தில் இருக்கும்! என்னைக் கேட்டால்?'

ஆசையோடு அருகே வர முயன்று, பின் வெறுப்போடு விலகி நின்ற ஆணவக்காரியை அளவிட முயல்வது போல் பார்வையை ஓட்டிய திருமாறன் அனல் மூச்சு உயிர்த்தான்.

'அமுதவல்லி! நீ வாழ விரும்புகிறவள். ஆடம்பரமாக, நன்கு அனுபவித்து, ஒய்யாரமாக வாழ ஆசைப்படுகிறவள். உன் ஆசைகளுக்குக் குந்தகமோ, இன்ப வாழ்வுக்கு ஒரு முடிவோ ஏற்படுவதை நீ விரும்பமாட்டாய். இதை நான் அறிவேன். உன் உல்லாச வாழ்வு தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அந்த முத்துமாலை உன்னிடம் இருக்கக் கூடாது. எனக்கு நீ அதைத் தந்து விடு என்று நான் கேட்க வில்லை. உரிய விலையைப் பெற்றுக்கொண்டு விற்று -