பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அன்னக்கிளி

 விடு என்றுதான் சொல்கிறேன். நாளை மீண்டும் வருவேன். உன் மறுமொழியோ, விளக்க உரையோ எனக்குத் தேவையில்லை. சடைய வர்ம பாண்டியன் மனைவியாரின் கழுத்தை அணி செய்த முத்தாரம் தான் எனக்கு வேண்டும். இவ்வளவே நான் சொல்வேன்!'

எச்சரிக்கும் தோரணையில் பேசிவிட்டுத் திருமாறன் அங்கிருந்து நகன்றான். அவளைத் திரும்பிப் பார்க்கும் எண்ணமோ ஆசையோ அவனுக்கு எழவேயில்லே.

10. கிளியும் ஆந்தையும்

பெருங்கூண்டில் அடைபட்ட சிறு பறவை போல் தத்தளித்த அன்னக்கிளி அஞ்சினாள்; வெய்துயிர்த்தாள்; வெலவெலத்தாள்.

கண் எட்டும் திக்கெல்லாம் குவிந்து கிடந்த முத்துக்களும் மணிகளும் இப்போது அவளைக் கவரவில்லை. கவர்ச்சிக்கும் பண்டத்தைக் காட்டி ஏமாற்றி எலியைப் பொறியினுள் அகப்படச் செய்வதுபோல், யாரோ தன்னையும் வஞ்சித்து விட்டார்களே என்று பதைப்புற்றாள் பாவை.

ஆனால் பிறர் செய்த வஞ்சகத் திட்டமா இது? இல்லையே. அவள்தானே இயல்பான அவாவோடு-என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையோடு-எட்டிப்பார்த்தாள். சிரிப்பொலி கேட்டதே; எவரையும் காணோமே என்று அறைக்குள் புகுந்து ஆராயத் துணிந்ததும் அவள் பேதமை அன்றோ?

இதற்கெல்லாம் மூலகாரணம் அமுதவல்லிதான் என்று அவள் தலைவியைக் கசந்தாள். 'நான்தான் இங்கே