பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

73

 பூட்டை எடுத்து வெளியே பூட்டி, சாவியைத் தன்வசமே வைத்துக் கொண்டான். வெளியே வந்து, வெளிப்புறப் பெரிய கதவையும் பூட்டினான்.

'ஆந்தை சிறைக்குள் ஒடுங்கிக் கிடக்கட்டும். நாம் திருமாறனாரைக் கண்டு, அறிய வேண்டியன பற்றி அறிந்து கொள்வோம், வா, மருது!’ என்று நடந்தான்.

11. சிங்கத்தை ஏமாற்றிய சிறுநரி.

திருமலைக்கொழுந்தும் மருது பாண்டியனும் திருமாறன் வருகைக்காக வெகுதேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கம்பீரமான வெண் புரவிகள் பூட்டிய அழகான வண்டி வேகமாக வருவதைக் கண்டதுமே 'திருமாறன் வந்து விட்டார்’ என்று உணர்ந்தார்கள் அவர்கள்.

அமுதவல்லியிடம் பேசியதால், உள்ளக் கனிவும் ஆனந்தமும் பெறுவதற்கு மாறாக, எரிச்சலும் ஏமாற்றமுமே கொண்டிருந்த திருமாறனின் முகம் கடுகடுவென்று காணப்பட்டது. 'நாம் வாய்திறந்து கேட்க வேண்டியதுதான்; அவள் முத்துமாலையை எடுத்து தங்கத் தட்டிலே வைத்து முக மலர்ச்சியுடன் நம் பக்கம் நீட்டுவாள்' என்று மனப்பால் குடித்திருந்தார் அவர். 'அமுதவல்லி நம்மிடம் ஆசை வைத்திருப்பதாகத் தெரிகிறது.இதைக்கூடவா செய்ய மாட்டாள் அவள்?’ என்றது அவர் மனம்.

அவரிடம் ஆசை கொண்டிருந்த அழகி அமுதவல்வியின் அழைப்பை ஏற்று, அவள் இல்லம் சேர்ந்து, அவளை மகிழ்வித்து, அவளது கருத்தறித்து பேச்சோடு பேச்சாக அந்த முத்தாரம் பற்றிய கோரிக்கையை அவர் விடுத்