பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

79

- டும். இல்லையேல் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்' என்று உறுமினார்.

'ஆந்தை உமது கையாள்; உமக்காக உம்முடைய காரியங்களை கவனிக்கிறவன் என்பதை நாங்கள் இப்பொழுதே காட்ட முடியும். முத்துக் குவியல்களும், மதிப்பு மிகுந்த அணிகளும் நிறைந்துள்ள அறையில் தன்னந் தனியாக விடப்படுகிற ஆள் உமது நம்பிக்கையைப் பெறாத வனாகவா இருப்பான்?' என்று திருமலை கேட்கவும் 'என்ன? வீணாக உள்றாதே. கனவு கண்டாயா?' என்று கத்திக் கொண்டு எழுந்தார் திருமாறன்.

'எங்களோடு வாருங்கள். உண்மையை உங்கள் கண்ணாலேயே பார்க்கலாம்' என்று திருமலையும் மருதுவும் கடந்தனர். திருமாறனும் அவர்களைத் தொடர்ந்தார்.

திருமலைக்கொழுந்து, சிறிது நேரத்திற்கு முன்புதான் பூட்டி வந்த அறையைத் திறந்தான். மூன்று பேரும் முன் அறையைக் கடந்து உள் அறைப் பூட்டையும் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தனர். திருமலையும் அவன் நண் னும் திகைப்படைந்து, 'ஆங்!' என்று ஒலி எழுப்பினர்.

திருமாறன் கடகடவெனப் பெருஞ் சிரிப்புச் சிரித்தார் நல்லதோர் வேடிக்கையைக் கண்டு உவகையுற்றுச் சிரிப்ப வர்போல் சிரித்தார். 'எங்கே தம்பி ஞ் சொன்ன ஆள்? ஈயாகி, எறும்பாகிக்,கொசுவாகி, காற்றாகிப் போனானே?' என்று கெண்டை பண்ணினார். உற்சாகமாகக் கைகளைத் தேய்த்துக்கொண்டு நின்ற அவரது கண்கள் குறுகி அறை முழுவதும் பார்வையில் துழாவின.

அந்த அறையில் எயில்ஊர் ஆந்தை காணப்படவில்லை.