பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

85


-தொடங்கவும் பெரியவள் பொறுமையிழந்து போதும் போதும்!' என்று சிடுசிடுத்தாள் .

சட்டென்று, அன்னம் எதிர்பாராத சமயத்தில் அவள் எதிர் பார்க்க முடியாத கேள்வியைத் தூக்கி எறிந்தாள் அமுதம். 'ஏய் அன்னம், என் கடிதத்தை நீ ஆந்தையிடம் வேறு காட்டினாயா?'

அன்னம் பதறிவிட்டாள். 'நான் ஏன் அம்மா ஆந்தையிடம் காட்டப் போகிறேன்? அந்த ஆந்தை திருமாறன் வீட்டிலேயே குடியிருக்கிறது என்பதை நான் இன்றுதான் அறியமுடிந்தது....'

இப்பொழுது அமுதவல்லி திகைப்படைந்தாள். 'இது என்ன கதை?' என்றாள்.

'பொய் இல்லை அம்மா நானாகவே சொல்லத் தொடங்கினேன். நீங்கள் கட்டளையிட்டதனால்தான் பேச்சை நிறுத்தினேன்' என்ற முன்னுரையோடு ஆரம்பித்து, அவள் அறிந்ததை - அனுபவித்ததை - எடுத்துச் சொன்னாள்.

'ஓகோ! ஆந்தை, மாறனின் கையாள்தான் என்று சொல்லு. அவன் முயற்சி பலிக்காமல் போனதால்தான். திருமாறனே இங்கு வந்திருக்கிறார். இல்லையெனில் அந்த மகாப் பெரியவர் நம் வீடு தேடி வரவாபோகிறார்?' என்று கசப்புடன் மொழிந்தாள் அமுதம்.

பொழுது ஊர்ந்து சென்றது. மாலை தேய்ந்து அந்திக் கருக்கலும் ஆயிற்று.