பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அவள் அருகில் கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தது. சாளரத்திற்கு வெளியே குயில் ஒன்று இரவு முழுதும் விடாமல் பாடிக் கொண்டிருந்தது; இதுவும் அவள் தைரியத்தைக் கைவிடாமலிருக்க உதவி செய்தது. அவள் பின்னிக்கொண்டே யிருந்தாள்.

பொழுதுவிடிய ஒருமணி நேரத்திற்கு முன்னால், பதினொரு சகோதரர்களும் அரண்மனை வாயிலில் போய்க் காத்திருந்து மன்னனைப் பேட்டி காண வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டார்கள். அரண்மனைக் காவலர்கள் அப்பொழுது அரசனை எழுப்ப இயலாது என்று மறுத்துச் சொன்னர்கள். வாயிலில் என்ன சப்தம் என்று பார்க்க அரசனே அங்கு வந்து பார்த்தான். அந்த நேரத்தில் கதிரொளி பரவிவிட்டதால் சகோதரர்கள் அங்கில்லை. அவர்கள் உருமாறி அன்னங்களாகி அரண்மனைக்கு மேலாகப் பறந்து சென்று விட்டனர்.

சூனியக்காரி எரிக்கப்படுவதைப் பார்க்க வேண்டுமென்று அன்று காலையிலிருந்தே மக்கள், கூட்டம் கூட்டமாக நகர வாயி லுக்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

எழிலி ஒரு கட்டை வண்டியிலே கொண்டு செல்லப்பட்டாள். சாக்குப் போன்ற துணியில் அவளுக்கு உடை அணிவிக்கப்பட்டி ருந்தது. அவள் வண்டியில் நின்றுகொண்டே, கடைசிச் சட்டையை முடித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய நீண்ட கூந்தல் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. அவள் கன்னங்கள் வெளிறியிருந்தன. உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. பாமர மக்கள் மாயக்காரி மந்திரம் சபிக்கிருள்! என்று அறியாமல் பேசினர்கள். அவள் கையிலிருக்கிற சட்டையைப் பிடுங்கிக் கிழித்தெறியுங்கள்!' என்றும் அவர்கள் கத்தினர்கள்.

கூட்டம் அவளைச் சுற்றி நெருக்கிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் வானத்திலிருந்து பதினொரு அன்னப்பறவைகள் வண்டியினை நோக்கி வேகமாகச் சிறகடித்துப் பறந்து வந்தன. அருகில் வந்ததும், எழிலி ஒவ்வொரு சட்டையாக ஒவ்வோர் அன்னத்தின் மீதும் அவசரமாகப் போர்த்தினுள். பதினொரு அன்னங்களும் பதினுெரு இளவரசர்களாக மாறி நின்றனர். ஆனால், கடைசி இளவரசனுக்கு மட்டும் ஒருகைக்குப் பதிலாக ஒரு சிறகு இருந்தது. ஏனெனில் சட்டையில் அந்தக் கையை மட்டும் பின்ன எழிலுக்கு நேரமில்லை.