பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இனி நான் பேசலாம்! நான் ஒரு பாவமும் அறியாதவள்!' என்று அவள் உரக்கக் கூவினாள்.

கடந்த காட்சிகளைக் கண்ணுற்ற பின் மக்கள் மனம் மாறி அவளைத் தெய்வப் பெண்ணாகப் போற்றினார்கள். ஆனால், கடுமையான வேலையினாலும், கவலையினாலும், துயரத்தினாலும், அச்சத்தினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த எழிலி மயங்கித் தன் சகோதரர்கள் மீது சாய்ந்து கிடந்தாள்.

மூத்த சகோதரன், அவள் அபலையென்றும், அப்பாவியென்றும் சொல்லித் தங்கள் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தான்.

எழிலி விழித்தெழுந்த சமயத்தில் அவள் உள்ளத்தில் இன்பமும் அமைதியும் தேங்கி நின்றன. தேவாலயங்களில் மணிகள் தாமாகவே அடித்து முழங்கின. பறவைகள் இன்னிசைக் குரலில் பாடி மகிழ்ந்தன. அந்த இடத்திலிருந்து மணக்கோலத்துடன் எழிலி ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மன்னனும் எல்லையற்ற மகிழ்ச்சி யடைந்தான். 1779–3