பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இடத்தை அறிந்து கொள்ளும்!', என்று அவன் எச்சரிக்கை செய் தான். "அப்படியே செய்வோம்! எல்லோரும் கலகம் செய்வோம்!" என்ற கோஷத்துடன் அங்கிருந்தவர்கள் யாவரும் கிளம்பும் சமயத்தில் சமையற்காரி உள்ளே வந்ததால், ஒவ்வொருவரும் சப்தம் செய்யாமல் தத்தம் இடத்தில் போய் அமர்ந்தனர். அறையில் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தாம் தாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை மனத்துள் எண்ணிக் குமுறிக் கொண்டிருந்தனர்.

'சமையற்காரி முதலில் தீக்குச்சிகளைக் கொளுத்தினாள். ஆகா, அவைகள் எவ்வளவு பிரகாசமாக எரிந்தன!.

'அந்தக்குச்சிகள் "நாம் தான் முதன்மையானவர்கள் என்பதை எல்லோரும் இப்பொழுது தெரிந்து கொள்வார்கள்! என்று தமக்குள் எண்ணிக் கொண்டன. சிலவிநாடிகளில் அவைகள் எரிந்து சாம்பலாகி விட்டன.'

“சிறந்த கதை! இவ்வளவு நேரம் நான் தீக்குச்சிகளுடன் சமைய லறையில் இருப்பது போலவே எண்ணினேன். என் மகளை நிச்சயமாக மணந்து கொள்ளலாம்!" என்று பாராட்டினாள் அரசி.

'அதுவே சரி!' என்று பகர்ந்தார் அரசர். 'அடுத்த திங்கட்கிழமை நீ எங்கள் குமாரியை மணந்து கொள்ளலாம். இப்பொழுது முதலே நீ எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாகி விட்டாய்' என்றும் அவர் உவகையோடு தெரிவித்தார்.

திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் நகரெங்கும் விளக்கு களும், தீவட்டிகளும் பேரொளி பரப்பிக் கொண்டிருந்தன. அரச மாளிகைக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காக உயரேயிருந்து பண்டங்களும், பணியாரங்களும், பிஸ்கோத்துகளும், மிட்டாய்களும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. பையன்கள் மரங்களில் ஏறி, ஜே, ஜே!' என்று பேரொலி எழுப்பியும், சீழ்க்கை யடித்தும் ஆரவாரம் செய்தார்கள். எங்கும் கோலாகலமாயிருந்தது.

மணமகனும் சும்மா இருக்கவில்லை. ஏராளமான வெடிகளையும், மத்தாப்பூக்களையும், வாணங்களையும் வாங்கித் தன் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு அவன் உயரே கிளம்பினான். ஒவ்வொன்றாகக்