பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நாள் அவன் வல்லமை பெருகி வந்தது. மக்கள் எல்லோரும் அவனிடத்தில் அச்சம் கொண்டனர். வெற்றி கொண்ட நகரங்களிலிருந்து அவன் பொன்னையும் பெருஞ் செல்வங்களையும் கொள்ளையிட்டு வந்தான். அவனுடைய தலைநகரத்தில் களஞ்சியம் நிறைய இரத்தினங்களும், பொன்னும், வெள்ளியும் குவிந்திருந்தன. அக் கொடியோன் தனக்காக மாட்சி மிக்க பல அரண்மனைகளைக் கட்டிக்கொண்டான். தான் அடைந்த வெற்றிகளுக்காக வெற்றி வளைவுகள் அமைத்தான். புதிய கோயில்களையும் எழுப்பினான். இவைகளைப் பார்த்தவர்கள், 'எவ்வளவு பெரிய மன்னன்!' என்று வியந்தார்கள். வெளிநாடுகளில் அவன் இழைத்த தீமைகளையும் கொடுமைகளையும் எண்ணிப் பார்க்கவில்லை; அவனால் அழிக்கப்பட்ட நகரங்களிலிருந்து கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய மக்களைப் பற்றி அவர்கள் கருதவில்லை.

மன்னன் மலைபோல் குவித்திருந்த தன் தங்கத்தைப் பார்த்தான். வானோங்கி வளர்திருந்த தன் மாடங்களையும் மாளிகைகளையும் பார்த்தான். அவனுடைய செருக்கும் ஆசையும் அதிகரித்தன. 'நான் எவ்வளவு பெரிய பார்த்திபன்! ஆனால் இன்னும் செல்வம் சேர்க்க வேண்டும், சேர்த்துக்கொண்டே யிருக்க வேண்டும்! எனக்கு ஈடாகவோ, என்னிலும் எடுப்பாகவோ எவரும் இருக்கக் கூடாது!' என்று அவன் கருதினான். மேலும் சுற்றியிருந்த நாடுகளோடு அவன் போர் அவன் தொடுத்தான்; அவைகளையெல்லாம் வென்றான். தோற்றுப் போன மன்னர்களை அவன் தங்கச் சங்கிலிகளால் தன் தேரில் கட்டி அதை இழுத்துச் செல்லும்படி செய்தான். அவனும் அரசாங்க அதிகாரிகளும் அரண்மணையில் விருந்துண்ணும் பொழுது, அடிமை அரசர்கள் கீழே தரையில் ஊர்ந்து கொண்டு அங்கே எறியப்படும் ரொட்டிப் பொருக்குகளைப் பொறுக்கி யெடுத்துக் கொள்ள வேண்டும்.

மன்னன் இவற்றுடன் நிற்கவில்லை; தன் சிலைகளைச் சந்தை அருகிலும், அரண்மனைகளிலும் வைக்கும்படி செய்தான். அடுத்தாற்போல் ஆலயங்களில் பலிபீடங்களுக்கு முன்னாலும் அவைகளை வைக்க ஏற்பாடு செய்யலானான். ஆனால் பூசாரிகள், 'அரசே, நீர் மேலானவர் தாம்! ஆயினும் கடவுள் உம்மிலும் மேலானவர்! தங்கள் சிலைகளை வைக்க எங்களுக்குத் துணிவு வரவில்லை!' என்று சொல்லிவிட்டனர். சொல்லி விட்டனர்.