44
கிடைத்திருக்கிறது. அங்கே நீ உன் இனிய இசையால் சக்கரவர்த்திக்கு விருந்தளிக்கலாம்' என்றார் உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்.
மரங்களினிடையேதான் என் இசை மிகவும் மதுரமாயிருக்கும்!' என்று சொல்லிவிட்டு, சக்கரவர்த்தியே அழைத்திருக்கிறார் என்ற காரணத்தால் குயில் அவர்களுடன் சென்றது.
அரண்மனை அலங்கரிக்கப்பட்டது. விழா மண்டபத்தில் ஆயிரம் பொன் விளக்குகளின் ஒளியால், இரவு பகலானது போலிருந்தது. பல நிறங்களிலுள்ள அழகிய மலர்க் கொத்துகளால், மண்டபம் முழுதும் மணம் கமழ்ந்து கொண்டிருந்ததுடன், சுவர்கள் யாவும் எழில்பெற்று விளங்கின. தரை முழுதும் பளபளப்பாக மின்னியது. ஆட்கள் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்ததால், காற் றடித்து, மலர்களிலுள்ள சிறு வெள்ளி மணிகள் கணகண என்று ஒலித்துக்கொண்டேயிருந்தன.
சக்கரவர்த்தியின் அரியணைக்கு எதிரே குயில் அமர்ந்திருப் பதற்கு ஒரு தங்கக் கம்பி தொங்கவிடப்பட்டிக்ருதது. அரசவை உறுப்பினர் அனைவரும், மற்றும் பெரிய அதிகாரிகளும் திரண்டு வந்திருந்தனர். அடுக்களைச் சிறுமிக்கு 'அடிசில் அதிகாரி' என்று இப்பொழுது பட்டம் சூட்டப்பட்டு, அவளும் வந்து ஒரு கதவடியில் இருந்தாள். எல்லோரும் தத்தம் உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வந்திருந்தனர். எல்லோருடைய கண்களும் சின்னஞ் சிறு குயிலின் மீதே பதிந்திருந்தன. சக்கரவர்த்தியும் அதனைப் பார்த்துத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
குயில் மிக மிக இனிமையாகப் பாடிற்று. சக்கரவர்த்தியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று; பெருகி அவர் கன்னங்களின் மீது வழிந்து கொண்டிருந்தன. அளவுக்கு அதிக மான உருக்கத்தோடு குயில் பாடியது, எல்லோருடைய உள்ளங் களையும் உருக்கி விட்டது. சக்கரவர்த்தி தம்முடைய மகிழ்ச்சி மிகுதியில் தமது தங்கப் பாதுகையை அதற்குச் சம்மானமாக அளிக்க முன் வந்தார். ஆனால் குயில் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, 'எனக்கு ஏற்கெனவே பரிசு அளித்து விட்டீர்களே! தங்கள் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் முத்துக்கள் போதாவா?' என்று கேட்டது. உடனே அது மேலும் ஒரு மதுர கீதம் இசைத்தது.