இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழைக் காலத்தில் தூக்கணாங் குருவிகள் பறந்து சென்று வசிக்கக் கூடிய ஒரு தூர தேசத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பதினொரு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் இருந்தனர். பதினொரு சகோதரர்களும் தங்கப் பலகைகளில் வயிர எழுதுகோல்களைக் கொண்டு எழுதிப் படித்து வந்தனர். அவர்கள் புத்தகங்கள் இல்லாமலே, பாடங்களைப் படித்துச் சொல்லக் கூடிய வல்லவர்கள். ஆகவே, அவர்கள் அரச குமாரர்கள் என்பதைக் கேட்காமலே சொல்லி விட முடியும். அவர்களுடைய தங்கை எழிலி ஒரு சிறு கண்ணாடி ஆசனத்தில் அமர்ந்து, படப் புத்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அரசர் அவளுக்காகப் பாதி ராஜ்யத்தை விலையாகக்
1779-1