பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கணப்புச்சட்டி, பொரித்த வாத்து, கிறிஸ்மஸ் மரம் எல்லாம் மறைந்து போய்விடவில்லையா? அவைகளைப்போல நீயும் மறைந்து விடாதே' என்று சொல்லிக்கொண்டே சிறுமி பெட்டி பெட்டியாகத் திக்குச்சிகளை மொத்தமாகச் சேர்த்துக் கொளுத்தினுள். தீக்குச்சிகள் பகல் வெளிச்சத்தைக் காட்டிலும் அதிக ஒளியுடன் சுடர்விட்டு எரிக் தன. அந்த நேரத்தில் பாட்டியும் மிகுந்த பொலிவுடன் விளங்கி ளுள். அவள் தன் இரு கைகளாலும் பேர்த்தியை வாரி எடுத்துக் கொண்டாள்; இருவரும் சுவர்க்கம் போய்ச் சேர்ந்தனர். அங்கே குளிரில்லை; பசியில்லை; துயரமும் கிடையாது. அவர்கள் அங்கே ஆண்டவருடன் இருந்தனர். ஆளுல் இரண்டு விடுகளுக்கு நடுவே யிருந்த முலையில் சுவ ரோடு சாய்ந்திருந்த சிறுமி அப்படியே இருந்தாள். அவள் கன் னங்கள் சிவந்திருந்தன; இதழ்களில் புன்சிரிப்பு தவழ்ந்துகொண் டிருந்தது. அவளுடைய உடல் பழைய ஆண்டின் இறுதி காளில் விறைத்துப் போய்விட்டது. புதிய வருடப் பிறப்பன்று பாதி எரிந்த திப்பெட்டிகள், சாம்பல் ஆகியவற்றின் கடுவே சாய்ந்திருந்த அந்தச் சிறு உடலின்மீது கதிரவன் கதிர்கள் வீசிக்கொண்டிருந்தன. காலையில் அந்த உடலைப் பார்த்தவர்கள், அவள் விறைத்துப் போன தன் உடலுக்குச் சிறிது சூடுண்டாக்க முயற்சி செய்திருக்கிருள்! என்று சொன்னர்கள். ஆனல் முந்திய நாள் இரவில் அவள் கண்ட அழகிய காட்சிகளைப் பற்றியோ, வருடப் பிறப்புக் கொண்டாட்டத் திற்கு அவள் தன் பாட்டியுடன் வானகம் சேர்ந்துவிட்டதைப் பற்றியோ, எவருக்கும் எதுவும் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/58&oldid=736204" இலிருந்து மீள்விக்கப்பட்டது