பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கற்றுக்கொண்டான். இளவரசியிடம் அரசியல் விஷயங்களைப் பேச லாம் என்பது அவன் எண்ணம். தவிரவும் குதிரைச் சேனங்களை அலங்கரித்துச் செப்பனிடுவது போன்ற சில நுணுக்கமான வேலை களும் அவனுக்குத் தெரியும். கானே அரசர் மகளை அடைவேன்! என் று அவர்களில் ஒள் வொருவனும் சொல்லிக்கொண்டான். தந்தை ஆளுக்கு ஒரு குதிரை யைக் கொடுத்தார். அகராதியும் பத்திரிகைகளும் ஒப்பிக்கக் கூடிய வன் கரிய குதிரையைப் பெற்றிருந்தான். நகர் மன்றச் சட்டங்களே அறிந்தவன் வெள்ளை நிறக் குதிரையைப் பெற்றிருந்தான். இரு வரும் புறப்படு முன்னல் உதடுகளில் ஒருவகை எண்ணெயைத் தடவிக் கொண்டனர். எண்ணெய்ப் பசை இருந்தால், மளமள என்று தட்டாமல் பேசலாம் என்பது அவர்கள் எண்ணம். அவர்கள் குதிரைகளில் ஏறிச் செல்லும்பொழுது வழியனுப்பு வதற்காக வேலைக்காரர்கள் அனைவரும் வாயிலில் வந்து கூடி கின்ற னர். அந்த நேரத்தில் முன்ருவது சகோதரன் ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான்-அவன்தான் கடைசிப் பையன். அவனே எவரும், மதித்துக் கவனிப்பதில்லை. ஏனெனில் மற்ற இருவரைப்போல அவ னிடம் படிப்பு கிடையாது. அவன் பெயர் கில்லாடி. கல்ல சட்டைகளெல்லாம் அணிந்துகொண்டு, நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று சகோதரர்களை அவன் கேட்டான். "இளவரசியை அடைவதற்காகப் போட்டியில் கலந்துகொள் ளப் போகிருேம். நாடெங்கும் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது உனக்குத் தெரியாதா?’ என்று சகோதரர்கள் கேட்டார்கள். 'நல்ல வேளை, அப்படியானுல் நானும் வரவேண்டியதுதான்' என்ருன் தம்பி. அவனுடைய அசட்டுத் தனத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே சகோதரர்கள் தங்கள் குதிரைகளில் ஏறிக்கொண்டு வேக மாய்ச் சென்றுவிட்டனர். கில்லாடி தங்தையிடம் கெஞ்சினுன்: அப்பா, எனக்கும் ஒரு குதிரை கொடுங்கள். நானும் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இளவரசி என்னை ஏற்றுக்கொண்டால் சரி, இல்லையென்றலும் அவளே நான் அடைவது திண்ணம்.' அட பயித்தியமே உனக்கு நான் குதிரை எதுவும் தரமுடி யாது. அங்கே போய் நீ என்ன திறமையைக் காட்டப் போகிருய்?" என்று அவர் ஏளனம் செய்தார். o o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/72&oldid=736220" இலிருந்து மீள்விக்கப்பட்டது