இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
77
'ஆம், இன்று இங்கே கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண்டிருக்கிறோம்’, என்றாள் அரசர் மகள். 'யார்- எதை?' என்று அவன் வினவினான். உடனே நிருபர்கள் அனைவரும், 'யார்----எதை?' என்று குறித்துக்கொண்டனர்.
'சரிதான், இவரையும் அழைத்துப் போங்கள்!' என்றாள் இளவரசி. அடுத்தாற்போல் கில்லாடி வந்தான். அவன் கீழே இறங்காமல் ஆட்டின்மேல் இருந்துகொண்டே அறைக்குள் போனான்.1799 10