பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னி பெசண்ட் அம்மையாரின்


2. ஆயகலைகள் கற்ற அன்னி!


தத்தை இல்லாமல் வெறிச்சோடிக் கொண்டிருந்த வீடு: கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டே இருந்த வீடு, இரண்டையும் கண்டு அன்னி முகத்தில் ஏதோ ஒர் சோகமேகம் படர்ந்து நகர்வது போல அவளது எண்ணங்கள் மாறி மாறி வந்து மோதின!


டாக்டரான வில்லியம் பிறகு வியாபாரமும் செய்து ரதோ வாழ்ந்து வந்தார்! போதிய செல்வம் ஒன்றையும் தனக்கேன சேர்த்து வைக்கும் சிந்தனையற்று வாழ்ந்துவந்து விட்டார்.


தனது மகன் ஹாரியையாவது. அந்த வணிகத்தில் ஈடுபடுத்தி வழிகாட்டினாரா என்றால், அதையும் தவறி வீட்டார்.


மகன் ஹாரி, வழக்குரைஞராக வேண்டும், புகழ்பெற வேண்டும், பொருள் ஈட்ட வேண்டும்; பெயரும் செல்வாக்கும் ஆவனைத் தாலாட்ட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சலிலே சாகும் வரை ஆடிவிட்டாரே ஒழிய, வாழ்க்கையை அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போய்விட்டார்.


அவர் உயிரோடு இருந்தபோதும் இதே ஆசையைத் தனது மனையிடமும் கூறி, இந்த அவரது அவாவைத் தவறாது ஈடேற்ற வேண்டும் கேட்டுக் கொண்டார்! எமிலியும் சரி என்றே வாக்கும் தந்து விட்டார். கணவரின் அந்த ஆசையை நிறைவேற்ற வழி என்ன என்று யோசித்துக் கொண்டே இருந்தார் எமிலி!


அப்போது எமிலியின் உறவினர்களான சர் வில்லியம் உட், வெஸ்டரின் உன் என்ற இருவர் அவர் வீட்டுக்கு வருகை தந்தார்கள். எப்படியும் எமிலி குடும்பம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்!


உயர்திலைப் பள்ளிக் கல்விவரை ஹாரியைப் படிக்க