பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

21

என்ற பண்பாடுடன் பழகியவள்; வீட்டு வேலைகளும் செய்தறியாதவள்; வேலைக்காரியிடம் வேலை வாங்கவே தெரியாதவள்; நூல்களைப் படிப்பதும், மத சம்பந்தமாகவும்: இறை உணர்வோடும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவே பழகியவள். அதனால், கணவன் போக்குக்கும், நினைப்புக்கும் அவனது செயல்கள் விரோதமாகவே இருந்தன.


இத்தகைய கொள்கை எதிர்ப்புகள் கணவன்-மனைவிக்கும் இடையே ஆரம்பம் முதலே உருவாகி விட்டதால், இருவரும் இரு துருவங்களாக மாறிடும் நில ஏற்பட்டு விட்டது.


இந்தச் சூழ்நிலையில் யாரை நோவது? காலத்தை நோவதா? அல்லது அன்னியின் வளரிப்புச் சூழலை நொந்து கொள்வதா? என்று புரியாமல் தம்பதிகள் இடையே மன மாச்சர்யங்கள் வீறிட்டு எழலாயின: குடும்பம், அன்னிக்கு ஒரு நரகமாகவே காட்சியளித்தது.


இந்த மனப்போராட்டத்தின் போராட்டத்தின் வேகத்தைத் தணித்துக்கொள்ள அன்னி நூல்களைப் படிப்பதும், அதைக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதுமாக இருந்தாள்.


இவ்வாறு அன்னிபெசண்ட் எழுதிய சிறு கதைகளை ஃபேமிலி ஹெரால்டு என்ற குடும்பத்தூதன் பத்திரிகைக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.


அந்த ஏடு, அவளின் கதைகளை வெளியிட்டு அதற்குரிய பணத்தையும் அனுப்பி வைத்தது. தனது வாழ்விலே தான் சம்பாதித்துப் பெற்ற பணமல்லவா? அதனால், அந்தத் தொகையைக் கண்டு மகிழ்ச்சிப் பெற்று இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள்!


சிறுகதை எழுதுவதில் அனுபவம் பெற்ற அன்னி பெசண்ட் நாவலும் எழுதி அதே பத்திரிகைக்கு அனுப்பிய போது, அந்நாவலிலே அரசியல் உணர்வுகள்: ஊடுருவியதால் அதைப் பிரசுரிக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது,