பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அன்னி பெசண்ட் அம்மையாரின்


குளோரோபாரம் என்னும் மயக்க மருத்தைக்கொண்டு உயிரை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். அந்த மருந்து இருந்த கண்ணாடி புட்டியை எடுத்து அதன் மூடியைத் திறந்து விட்டார்: அப்போது அவரது உள்மனம் எதிரொலித்தது.


"அன்னி நீ ஒரு கோழை! இறந்த கொள்கைகளுக்காக ஆவியைத் தியாசம் செய்யவும் தயாராக இருப்பேன் என்று கூறினாயே! அந்த முடிவு என்னாயிற்று சிறிது கலமே நிற்கக்கூடிய இந்த துன்பத்தைக் கண்டா நீ இறந்து போக நினக்கிறாய்? என்று அன்னியின் மனமே வளைக்கேட்டது.


உள் மனத்தின் எதிரொலியைக் கேட்டு அன்னி மனம் மாறினார். தற்கொலை கோழைத்தனம். அத்துடன் பயங்கமான செயல் என்பதையும் அவர் உணர்ந்தார். அந்த எண்ணத்தைக் கைவிட்டார். கையில் வைத்திருந்த பாட்டிலைத் தாக்கி எறிந்தார். மயக்கமாகக் கீழே சாய்ந்தார். நெடு நேரத்திற்குப் பிறகே அவர் மயக்கம் தெளிந்தது.


வாழ்க்கை ஒரு கரடுமுரடான பாதை அதன் மீது நடத்தால் கல்லும் முள்ளும் குத்திக்காலைக் காயப்படுத்தாமலா இருக்கும்? இந்த துன்பங்கனை எதிர்த்துக் கடப்பதே வாழ்க்கைப் பயணம் என்று உணர்ந்து கொண்ட அன்னி ஒருவாறு தெளிந்து எழுந்து கணவன்-மனைவி இரு துருவங்கள் என்ற பாதையிலே தனது வழிப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், துருவங்கள் இரண்டும் ஒரு சேரமுடியாது என்பதை உணர்த்தே நடக்கலானார்!


மதம் வெறுப்பு! விவாகரத்து தீர்ப்பு!


இரு துருவங்கள் இணைய முடியாது என்ற வாழ்க்கைப் பயணத்தில் நடத்து கொண்டிருந்த அன்னி, மீண்டும்