பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அன்னி பெசண்ட் அம்மையாரின்

கொண்டார். தாய் வீட்டிலேயே தங்கி, வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க முனைந்தார்.


இந்த முடிவைக் கண்ட எமிலி மனம் கலங்கினார். இருபத்தாறு வயது கூட ஆகாத தனது மகளின் வாழ்வு இப்படித் தலைகீழாக மாறிவிட்டதே என வருந்தினார்: கண்ணிக் விட்டார்.


அன்னியின் கால்கள் முன்பே மண்டியிட்டுக் கதறி, "அன்னி உனது முடிவை மாற்றிக் கொள்ளம்மா" என்று மன்றாடினார் எமிலி.


"அம்மா, பெசண்ட்டை விட்டுத் தணியாகப் பிரிந்து வாழ்ந்தால் தானம்மா எனக்கு மன நிம்மதி கிடைக்கும்: அடிக்கடி நோய் வந்து என்னை வாட்டிட எனது மன வேதனைதான் காரணம்! அன்புக் காட்டாத கணவன் ஒருவரிடம் வாழ்வதைவிட நரகமே, மேலம்மா நெருப்பிலே கூடத் தூங்கி விடலாம்; இந்த சர்வாதிகார நெருப்பிலே படுக்கமுடியாது மறுபடியும் நான் கணவனிடம் போய் வாழ்வது, பாம்புடன் கூடிக்கலந்து வாழ்வதற்குச் சமம்! எப்போது அந்த ஆணாதிக்கப் பாம்பு தனது நச்சுப் பல்லால் கொத்திடுமோ என்று பயந்து பயந்து சாகின்ற வாழ்வை எத்தனை நாட்களுக்கு என்னை அனுபவிக்கச் சொல்கிறாய்?" என்று கண்ணிர் விட்டபடியே பெற்ற தாயின் பாதங்களைப் பிடித்துக் கதறி அழுதாள் அன்னி!


இந்த இளம் வயதிலே வாழாவெட்டி என்ற பெயரோடு நீ இருந்தால் கூட, இந்த உலகம் தூற்றுமே உன் பெயருக்குப் பழிவந்து சேருமே என்றுதான் அஞ்சுகிறேன் அன்னி, என்று எமிலி உருகிக் கதறிக் கண்ணிர் விட்டாள். தாயும்-மகளும் இப்படி மாறி மாறி அழுகின்ற சோகத்தைக் கண்டு, இரும்பு கூட தேய்ந்து தேய்ந்து கண்ணிர் விடுமோ” என்ற திலைதான் உருவானது.