பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

33


உடன் பிறந்த அண்ணன் ஹாரி தழுதழுத்தாரே தவிர, ஓர் ஆறுதலும் ஒப்புக்காகக் கூடச் சொல்லவில்லை. ஆனால, பிராங்க் பெசன்டிடம் விவாகரத்து பெற்றே தீர வேண்டும் என்ற முடிவிலே அவரும் இருந்தார்.


நீதிமன்றம் சென்றது அன்னி விவாகரத்து வழக்கு: விவாகரத்து பெற்றார் தனது கணவரிடம் இருந்து அன்னி. ஆனால், ஆண் குழந்தை ஆர்தர் தந்தையிடமும், பென் குழந்தை மேபல் எமிலி தாயிடமும் இருக்க வேண்டும் என்றும், கணவர் பிராங்க், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாகத் தர வேண்டும் என்றும் தீர்ப்புக்கூறப்பட்டது: பிள்ளைகள் கதறின: பிராங்குக்கு அப்போதும் கல்மணமே காட்சி தந்தது.


அன்னிக்கு ஜீவனாம்சம் பணம் வாழ்க்கையை நடத்தப் போதவில்லை என்பதை அறிந்த அண்ணன் ஹாரி, ஒரு நிபந்தனையுடன் வீடு ஒன்றைக் கொடுக்க முன் வந்தார்:


அந்த நிபந்தனை என்ன? "மத எதிர்ப்பாளர்களிடம் தொடர்புகொள்ளக்கூடாது மதத்தைப்பற்றி எதுவும் பேசக் கூடாது, என்பதே அது. எந்த நிபந்தனைக்கும் இனிமேல் கட்டுப்படக்கூடாது; அடிமையாகக் கூடாது என்ற முடிவை மேற்கொண்ட அன்னி, தனது அண்ணன் நிபந்தனையையும் ஏற்க மறுத்தார்:


எந்த நிபந்தனைக்கு அடிமையானாலும் சரி, அந்த வாழ்க்கை இருண்ட வீடாகவே இருக்கும். கூட்டில் இருந்து விடுதலைப் பெற்றால்தான் அந்த வாழ்வு சுதந்திரமாக இருக்கும்.


உண்ண உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, அடைத்து வைத்து அடிமைப்படுத்தாமல் இருந்தாலேஅ-3