பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

37


சார்லஸ் பிராட்லாவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றும் எண்ணம் அன்று முதல் அன்னிக்கு வந்தது. ஏழை எளியவர்கள் பிராட்லாவிடம் திரளாகக் கூடி வந்து பழகும் பழக்கத்தையும் அன்னி நேரில் பார்த்ததால், நம்மாலான பணிகளையும் இந்த ஏழை மக்கட்குச் செய்யலாமே என்ற லட்சிமும் அவருக்கு ஏற்பட்டது:


ஆனால், பிராட்லா அன்னியைத் தன் கூடச் சேரக் கூடாது என்று மறுத்தார். காரணம் நான் ஓர் ஆண், என்னை மதம் சார்பாக எதிர்ப்டோர் ஏராளம் பேர்! அதனால் அவர்கள் தொல்லைகளை ஏற்றுப் போராடி வருகிறேன் நீ ஒரு பெண் உன்னால் சமாளிக்க முடியாது. வம்புகளை விலை கொடுத்து வாங்காதீர் என்று கருணையால் அவர் மறுத்தார்-எச்சரிக்கையும் செய்தார்!


கேட்கவில்லை அன்னி பிடிவாதமாக, தங்களுடன் சேர்ந்துதான். நானும் மத எதிர்ப்பிலே ஈடுபடுவேன்: எனக்கும் அதே எண்ணம் உண்டு தடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அன்னி!


"தேசிய சீர்திருத்தவாதி" என்ற பத்திரிகையை அப்போது பிராட்லா தடத்தி வந்தார் அன்னி அந்த ஏட்டிலே தனது கருத்துக்கனை அச்சமின்றித் தாராளமாக எழுதி வந்தார்! அதனால் ஓரளவு ஊதியமும் வந்து கொண்டிருந்தது மகளையும், குடும்பத்தையும் நடத்தினார்.


பிராட்லா பத்திரிகையில் மதச் சீர்திருத்தம், தொழிலாளர் துறை மாற்றங்கள், மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து எழுதி வந்ததால் பழைமை வாதிகளது பகை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது!