பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45

பெர்னாட்ஷாவைப் போன்றவர்களும் பெர்னாட்ஷாவும் மனமார மதித்துப் பாராட்டி மகிழ்த்தார்கள்.


இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்னி, தொழிலாளர் நலன்களைக் கண்ட இங்கிலாந்து அரசு தொழிலாளர்களுக்குரிய நன்மைகளை விரிவாகச் செய்து வந்தது.


தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக, வேலை இல்லாத மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர்கள் பிரச்சினைகளைப் பத்திரிகையிலும் எழுதலானார்.


"ஒன்று மட்டும் உண்மை. வேலையற்றோர் மீது சமுதாயமும்-அரசும் அக்கறை காட்ட வேண்டும். இல்லா விட்டால் அவர்கள்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள் வருங்காலச் சமுதாயம் புரட்சிக்கு வித்திடும்" என்பதைத் தெளிவாகப் பத்திரிகையில் எழுதினார். பாராளுமன்றத்திலும் பேசினார்.


அன்னி இவ்வாறு பேசியதற்கு ஏற்றவாறு, வேலை இல்லாதவர்கள் லண்டனிலே உள்ள டிரபால்கர் என்ல சதுக்கத்தில் கூடி, தங்களது நிலைகளை அரசுக்கு எடுத்துக் கூறிட கூட்டம் போட்டார்கள்.


கருணை காட்டவில்லை அரசு; கடுமையாக நடந்து கொண்டது; சதுக்கத்தில் திரண்டிருந்த அந்த சோக வாழ்வினரால் போக்குவரத்து இடையூறு என்ற காரணத்தைக் கூறி அரசு கூட்டத்தைக் கலைத்தது.


இந்தப் பிரச்சினை அன்னிக்குத் தெரிந்து, உடனே கூட்டத்திற்கு ஓடிவந்து, "கூட்டம் கூடுவதும்-குறைகளை எடுத்துச் சொல்வதும் அடிப்படை உரிமைகள்! அந்த உரிமைகளைப் பறிப்பது. அநியாயம் வேலையும் இல்லை உண்ண உணவும் இல்லை; உடுக்க துணிமணிகளும் இல்லை. இந்த நிலையில் கூட்டம் கூடித் தங்கள்