பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னி பெசண்ட் அம்மையாரின்

50


பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகரில் அடையாறு பகுதியிலும் இதன் கிளை ஒன்று இருக்கிறது.


ஒரு நேரத்தில் இதே பிளாட்வஸ்கி அம்மையாரை எதிர்த்து எழுதியவர்தான் அன்னி பெசண்ட்! பிரும்ம ஞான சபை விவரங்களும் அன்னியின் பார்வையிலே இருந்து தப்பவில்லை.


ஆனால் இப்போது, தாக்கப்பட்ட அம்மையாரின் நூற்களுக்கு விமரிசனம் எழுதி மகிழ்வடைந்துள்ளார் என்றால், கால மாற்றத்தின் அறிவுச்சக்கர வேகத்தைக்கண்டு நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை.


ஆனால், அம்மையாரது புத்தகங்களைப் படித்த அன்னிபெசன்ட், தாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டார்.


பிளாவட்ஸ்கி அம்மையாரை நேரில் பார்க்க வேண்டும் என்றார். அவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று துடிதுடித்து, இறுதியாக நேரிலே சென்று ஆவரைக் கண்டார்.


அம்மையாரின் அமைதியான தோற்றம் தெளிவான மேன்மையான ஞானத் தெளிவு, அன்னி பெசண்டை மிகவும் ஈர்த்து விட்டது! இருந்தாலும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அளவளாவிக் கொண்டார்கள்.


பிரும்மஞான சபையில் அன்னிபெசண்ட் உறுப்பினராக வேண்டும் என்று நினைத்தார்! தனது வீட்டிற்கு வந்ததும் அதைப்பற்றி சிந்தித்தபடியே இருந்தார்!

ஒருநாள் பிளாவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்து தனது முடிவை அவரிடம் தெரிவித்தார்! அதற்கு அவர், 'உளவியல் ஆய்வுக்கழகம் தன்னைப் பற்றி எழுதியுள்ள புத்தகங்களை வாங்கிப் படித்து விட்டு வா' என்ற பதிலைக் கூறி அனுப்பி விட்டார்.