பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67

படுத்தியது மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சம்பவமாகும்.

அன்னி பெசண்ட் அம்மையார், ஆணாதிக்க மதவெறி பிடித்த கணவனால் கொடுமை படுத்தப்பட்டவர். அதற்காக பத்திரிக்கையில் பல கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி தாமஸ் ஸ்காட் மூலம் வெளியிட்டவர் என்பதை அவர் மறக்கவில்லை.

அதற்கேற்ப தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த ஓர் இந்தியர், பெண்களை அடிமைகளாக நடத்தி வந்ததைக் கேள்விப்பட்டுப் புண்பட்டமணமானார்! அதே நேரத்தில் அவருடைய சொந்த நிகழ்ச்சிகளும் அவருக்கு நிழலாடின.

ஆணும், பெண்ணும் வாழ்வின் இரண்டு கண்கள். அவர்களுள் உயர்வு தாழ்வு காட்டுவது தண்டனைக்குரிய ஒன்று என்று எண்ணி அதற்கான நடவடிக்கைகளிலே தீவிரமாக ஈடுபட்டார்.

பெண் கல்வி அவசியத்தையும், பொதுவாழ்வில் பெண்கள் தன்னைப் போலத் துணிகரமாக ஈடுபட வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட அவர், பெண் கல்விப்பள்ளிகளை ஆங்காங்கே உருவாக்கினார். அதில் ஒன்றுதான் பவானி பாடலிகா பாடசாலை.

1919-ம் ஆண்டு. வடநாட்டிலே பெண்களுக்கு என்று ஒரு மாநாடு கூடியது. அதில் தாசிகள் சேர்க்கப்படவில்லை. அதை மறுத்து அற்புதானந்தா சுவாமிகள்- திரு.வி.க. தேசக்தின் பத்திரிகைக்கும்-ஆன்னி பெசண்ட் ஆம்மையாருக்கும் தகவல் அனுப்பினார்.