பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டம்: கஸ்தூரிபாய் கைது!



1942-ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் தொடங்கியது. இதுதான் எனது கடைசிப் போராட்டம் என்று காந்தியடிகள் கூறிவிட்டார். அந்த ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு பம்பாயில் கூடுவதாக இருந்தது!

விடியல் நேரம்! இருள் இரவை விட்டுப் பிரியாத வேளை! மகாத்மாவும் கஸ்தூரிபாயும் அன்று பிர்லா மாளிகையில் தங்கி இருந்தார்கள். அப்போது ஆங்கிலேயர் அரசு அந்தக் கருக்கல் இருட்டு நேரத்தில் மகாத்மா காந்தியைக் கைது செய்தது!

அன்று மாலை சிவாஜி பூங்காவில் காந்தி அடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை ஆட்சி கைது செய்து விட்டதால், கஸ்துரிபாய் அடிகளாருக்குப் பதிலாக பேசுவார் என்று கூறப்பட்டது.

அன்றுமாலை இரண்டு காவலர்கள் பிர்லா மாளிகைக்கு வந்து, இன்றைய பொதுக்கூட்டத்தில் கஸ்தூரிபாய் பேசப்போகிறாரா என்று அங்குள்ளவர்களைக் கேட்டார்கள். உடனே ஆம் நான் தான் பேசப் போகிறேன் என்று அந்த அதிகாரிகளிடம் கஸ்தூரிபாய் கூறினார். உடனே போலீசார், கஸ்தூரி பாயையும், பியாரிலாலையும், சுசிலா நய்யாரையும் கைது செய்தார்கள். ஏற்கனவே கைது செய்யப்பட்ட காந்தியடிகளை பூனாவில் உள்ள ஆகாகான் அரண்மனையில்