100 கொடுக்கப்படுவதும் மெய்தான்; ஆல்ை, ஒன்று குழந்தைகள் எந்த வழியில் அல்லது, முறையில் வந்தாலும் சரி, இதுவரையிலும் நாங்கள் ஒரு குழந்தையைக்கூட ஏற்காமல் மறுத்தது கிடையாது; கிடையவே கிடையாது!” அறநெறியின உயிராகவும் அன்பு வழியின உயிர்ப் பாகவும் கொண்டும், மேற்கொண்டும் ஆண்டவன் ஏசுவின் அன்புக் கட்டளைகளுக்கு இணங்க ஆரம்பித்து, நடத்தி வரும் அன்பு இயக்கத் தலைவி அன்ன தெரேசா மூன்று, ஆண்டுகளுக்கு முன்னதாக, பாரதத் தலைநகர் புதுடில்லியில் கிறித்தவத் திருச்சபையில் மனம் நெகிழ்ந்த, சுயநலம். வென்ற மனிதாபிமானத்தின் மனச் சமாதானத்தில் ஆற்றிய பேருரையை மனிதத் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள். அன்னையின் அருந்தவப் பொதுத் தொண்டுகளைத் தன் பங்கிலும் உலகிற்கு நினைவூட்டி வெளியிட, அன்பின் அழகோடும் அழகின் அன்போடும் கூடிய நூலொன்றைத் தொகுத்தும் பகுத்தும் 1980 ஏப்ரல் காலக்கட்டத்தில் வெளியிட்டவர் திருமதி டாஃப்னே ரே (Daphne Rae). மேற்கண்ட சொற்பொழிவில் மாதா இப்படியாக முடிவுரை வழங்கினர் : கடவுளை நேசி; க ரு ப் பை யி ல் உயிர்வாழும் தெய்வத்தின்பால் அன்பு கொள்; பிறக்காத குழந்தையில் ஆண்டவனிடம் நேசம் பாராட்டு; குடும்பத்தில் கடவுளுக்கு அன்பு செய்: அண்டை அயலாளரை ஏசுவாகப் பாவித்து அந்த ஆண்டவன் ஏசுவிடம்-ஏசு ஆண்டவனிடம் அன்பு செலுத்த, அண்டை அயலாரிடம் அன்பு செலுத்து! -அன்பு தொல்லைப்படுத்தும் வரை, அந்த அன்பை வாழச் செய்யுங்கள்; வாழ்த்துங்கள்; வாழ்த்தவும் செய்யுங்கள்!" கல்கத்தா நகரிலே, அறநெறியின் ஆதார சுருதியுடன் ஜீவகீதம் பாடிவரும் தெரேசா அன்னையின் அன்பு மேவிய நடைமுறைச் செயற்பணிகள் இயங்கவும், இயக்கப்படவும்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/100
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை