பக்கம்:அன்னை தெரேசா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 புனிதமானதொரு கருவறையாகத் திகழ்ந்து வரும் "அன்பின் தூதுவர்கள்’ என்னும் அமைப்பின் தலைமை நிலையம் தெரேசா இல்லம்’ என்று அழைக்கப்படுகிறது. அங்கேதான் கிறிஸ்தவக் கன்னி துறவியரோடு, அன்னையும் வசித்து வருகிருர்கள். கொடுமை மிக்க வறுமையின் கடுமையான உடும்புப் பிடியில் அகப்பட்டுச் சுடர்விளக்காகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் நாதியற்ற ஏழை எளியவர்கள், பெற்றேரால் கைவிடப்பட்ட குழந்தைகள், மரணத்தின் தலைவாசலில் நோயோடு போராடி உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற பலதரப்பட்ட பிணியாளர்கள் மற்றும் தொழு நோயாளிகள் ஆகியோரின் எல்லாவகையான மேம்பாடுகளையும் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களைத் தவிர, வேறு பல இன்றியமையாத காரியங்களே யும் அன்னேயின் இயக்கம் அன்புடனும் அக்கறையுடனும் சிறப்பாகச் செய்து வருகின்றது. இங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு, பசியாலும், :பட்டினியாலும் வாடுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்ருடம் ஏழாயிரத்துக்கும் கூடுதலான ஏழைகள் பசிப் பிணி நீங்கி நல்ல மூச்சு விடுகிரு.ர்கள்!--இவ்வழியில், உலகம் நெடுகிலும் செயற்பட்டு வரும் அன்னேயின் அன்பு இல்லங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமுதசுரபியாகவே தொண்டாற்றி வருகிறதென்பதும் குறிக்கத்தக்க சேதி தான்!-இத்தகைய உலகரீதியான அமுதசுரபித் தொண்டு களில், இயக்கத்தின் பரிசுத்தக் கன்னிகைகள், தூய சகோதரர்கள் மற்றும் அன்பான உடன்உழைப்பாளர்களும் பங்குபற்றி வருகின்றனர். அன்புப் பணி மனேயில் மருத்துவத் துறையும் மும்முர மாகச் செயற்படும். அன்பின் தூதுவர்கட்கு மத்தியில் மருத்துவப் பயிற்சி பெற்ற தூய சகோதரிகளும், துர்ய சகோதரர்களும் பணிபுரிகின்றனர். தேசியநலப் பணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/101&oldid=736235" இலிருந்து மீள்விக்கப்பட்டது