166 பணிவழிகளில் பழக்குவதில் வல்லுவரான இவர் மனே தத்துவ ரீதியாகவும் வைத்திய முறைகளை வழிநடத்தி வருகின்ற காரணத்தால், அன்னையின் இவ்வகைத் தொண்டுகளும் நல்லவர்களைக் கவர்ந்து ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லைதான்! - தொழு நோயால் அவதிப்பட்டு அல்லற்பட்டவர் களுக்கு மத்தியில் படித்தவர்களும் இருந்தார்கள்; அவர் களும் கூடத்தான் தங்கள் தங்கள் குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஒரு காலத்திலே, உயர்வ்ான வாழ்க்கை நிலையில் இருந்த வர்கள், நோய் பற்றியதும், பற்று இழந்து, நிலை தாழ்ந்து ஒதுக்கிய சமூகத்தை ஒதுக்கி விட்டு, எங்கேயோ கண் காணுத தொலை தூரங்களில் எப்படியோ வாழ்ந்து உயிரைப் பிடித்து வைத்திருந்தவர்களில் சிலரும்.அப்போது அன்பின் தலைவாசலை மிதிக்கும் பாக்கியத்தைப் பெற். முர்கள். கருமவினையால் நிராகரிக்கப்பட்டு, வெறுக்கப் பட்டு, கழிக்கப்பட்ட இப்பிணியாளர்களேக் கூட்டி இணைத்து அன்பு செலுத்தவும், பரிவு சேர்க்கவும், பாசம் ஊட்டவும், அபிமானம் காட்டவும் அன்னையின் அன்பு ராஜ்யத்திலே அன்பே உருவான தூய சகோதரிமார்கள் எப்பொழுதும் தயாராக இருந்தனர். தங்களை நேசிக்கவும், தங்களிடம் அன்பு பாராட்டவும் உலகத்திலே நல்லவர்களே ஆண்டவன் படைத்திட மறந்துவிடவில்லையென்னும் ஆத்மார்த்தான அமைதியில் அவர்களெல்லாம் நோய் தீர்ந்து, நாலு: பேர்கள் மாதிரி பாழாய்ப்போன இந்த மண்ணிலே வாழக் கூட ஆசைப்பட்டார்கள்! . மெய்! -ஆண்டவன் ஆடும் விளையாட்டின் விதியை யாரால் அறிந்து உணர முடிசிறது? - சிருஷ்டி போடும் விடுகதைக்கு அந்த சிருஷ்டியே விடை தருவதில்லையா? -
பக்கம்:அன்னை தெரேசா.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை