116 உலகத்தின் நன்மக்களின் அன்பிற்கும், வணக்கக் திற்கும் உரியவராகத் திகழ்ந்து வருகின்ற தெரேசா அன்னே, ஆண்டவனின் அருட்கொடையான மனிதத் தன்மையின் பேரால் ஆரம்பித்து நடத்தி வருகின்ற அன்புத் தூதுத் தொண்டுகளின் ஆத்மார்த்தமான தூய நோக்கத்தை உணர்த்தறியாமல் அன்னையின் பணிகளுக்கு அவரவர்களின் இஷ்டப்பிரகாரம் வெவ்வேறு வடிவங்களைக் கற்பித்துத் தூற்றவும் அவ்வப்போது ஓரிருவர் கிளம்பி யதும் பொய் இல்லைதான்!-பிச்சைக்காரர்களுக்குப் பசிக்குச் சோறு போடுவது குற்றமா? பிச்சைக்காரர்களும் ஆண்டவனின் குழந்தைகள்தாமே?--சோறு கிடைக்கா விட்டால், அவர்கள் செத்துப் போய்விட மாட்டார்களா? அவர்களின் உயிர்களைப் பறிக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறதாம்? பிச்சைக்காரர்களுக்கு வாழ வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் நாட்டின் கடமை இல்லையா? சமூகத்தின் பொறுப்பு: இல்லையா? இத்தகைய வாய்ப்பு வசதிகள் நாட்டில் முறை யாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டால், பின்னர், பிச்சைக் காரர்கள் நாட்டிலே ஏன் தோன்றப் போகிரு.ர்கள்?’’பிறிதொரு .ே வ ளை யி ல், பிச்சைக்காரர்களுக்காகவும்: வருந்தினர்கள் அன்னே! மனிதாபிமானம்' என்னும் மனிதப் பண்பு நலம்தான் அன்னையின் ஒரே சொத்து! அந்தச் சொத்து, கடவுளின் சொத்து. பின், அன்னையின் அன்பு வெற்றி பெற்றதும், வெற்றி பெறுவதும் நீதிதானே?-நியாயம் தானே? தருமம் தானே? நிரூபிக்கப்பட்டுப் பிரகடனப்படுத்தப் பட்டுவிட்ட அன்பின் வெற்றியைச் சித்திரிக்கு ம் உலகச் சரித்திரத்தில்,
பக்கம்:அன்னை தெரேசா.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை