121 வண்ணம் இழந்த தொழுநோயாளிகளுக்கெனத் தனிப் பட்டதோர் இல்லத்தை 1957-ம் ஆண்டில் நிறுவி சாந்தி நகரை உருவாக்கியது, பிறகு ஆதரவற்ற பெண்களுக் கெனவும் பிரேம்தன்” என்ற பெயரில் பிரத்தியேகமான தொரு அன்பின் நிழலை உண்டாக்கியது, இந்திய நாட் டைக் கடந்து, வெளி நாடுகளில் முதன் முதலாக வெனிசுலா நகரில் அன்புப்பணி இயக்கத்தின் முதற் கிளையை ஏற்படுத்தியது, அப்பால், போப் ஆண்டவரின் விருப்பப்படி ரோம் நகரிலும் ஒரு கிளே அமைப்பை அமைத்தது, பின்னர், உலக நாடுகளில் பல்வேறு இடங் களில் பல்வேறு துணே அமைப்புக்களை நிறுவியது போன்ற பல தரப்பட்ட நிகழ்வுகள் அன்னேயின் அன்பு தளும்பிய மனத்திலே நிழலாடின; ஒளியாடின! கர்த்தரே! எம் பெருமானே! மெய்ம்மறந்த நிலையில் தரிசனம் தந்த அன்னையின் உருவிலே அப்போது பரிசுத்த மாதாவே தரிசனம் தந்திருப்பார் போலும்! ஆம் : அன்பிற்கும் நம்பிக்கைக்கும் இடையே உலகிடை அன்புப் பாலம் சமைத்து உலகத்திலே நல்லமைதியை உலகளாவிய சமதர்மப் பொதுநோக்கிலே பேணிக் காத்து, உலக மக்களிடையே நல்லெண்ணம் பண்படப் பாடுபடும் அன்னைக்கு மரியாதை செய்து பெருமைப்படுவதற் காகப் பெருமையோடு தேடிவந்த நோபல்பரிசு, அன்னைக்கு உரிய மரியாதையைச் செலுத்திப் பெருமை பெற்ற அதே 1979-ம் ஆண்டில் அன்னை தெரேசா சுயப் பிரக்கினை அடையலாளுர்! அன்பின் பணிக்கடனுக்கு நோபல் பரிசில் வைர முடியாகச் குட்டப்பட்டது. - - - - வைரக்கிரீடத்தில் முன்னும் பின்னுமாக எத்தனை எத்தனை வைரக்கற்கள் பளிச்சிடுகின்றன! அ. தெ. - 8
பக்கம்:அன்னை தெரேசா.pdf/121
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை