131
கண்டு அடைவீர்கள்! தட்டுங்கள்; திறக்கப்படும்!’ என்னும் ஏசுமொழியே அப்பொழுது துறவுக்கன்னியென வளம் பெற்று, வாழ்வு பெற்று வந்த அக்னெஸின் வருங்காலக் குறிக்கோட் கனவாகவும் வளர்பிறை ஆயிற்று.
பழம்பெரும் நாடான பாரதத்திருநாடு புண்ணியத்தில் என்றென்றும் உயர்ந்து விளங்குவது அல்லவா? அந்தப் புண்ணியத்தின் நற்பவளுகவே, அக்னெஸின் இளம் நெஞ்சத்தில் ஏழை இந்தியா முன்னுரிமை பெறவும் முடிந்திருக்கவேண்டும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களும் "லொரெட்டோ கன்னியர் மடத்தைச் சார்ந்த சேவகி களும் இந்திய மண்ணில், குறிப்பாக, கல்கத்தா நகரில், முணேப்புடன் ஆற்றி வந்த பொது நலத் தொண்டுகள்பற்றி அறிய அறிய, அக்னெஸின் அன்புக்கும் பரிவுக்கும் பாத்திர மான இந்தியா அவளது தொண்டு உள்ளத்தின் இலட்சியப் பூமியாகவும் ஆனது!
கனவுகள் இல்லையேல், லட்சியங்கள் இல்லை.
அக்னெஸைப் பொறுத்தமட்டில், அவளது கனவுகளும் லட்சியங்களுமே அவளது வாழ்க்கை ஆயின.
அது தியாக வாழ்க்கை!
தவ வாழ்க்கை அது! -
அன்பையே உயிர்ாகவும் துறவையே உள்ளமாகவும் கொண்ட கன்னி அக்னெஸ், 1929-ம் ஆண்டில் புனிதமான இந்திய நாட்டில் கல்கத்தாவின் புனிதமான மண்ணில் அடியெடுத்து வைத்தார்!
அன்று:
பாரதி எத்துனே அழகாகவும் சுதந்தரமாகவும் அன் பானதொரு கனவைக் கண்டிருக்கிருர்!
'அன்பிற்கினிய இந்தியா அகில மதங்கள், நாடுகள், மாந்தருக்கெல்லாம் தாயே! எங்கள் உணர்