பக்கம்:அன்னை தெரேசா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

 வினைத் தூண்டிய சேய்நெடுங் காலத்தின் முன்னே சிறந்தொளிர் குருக்களை அளித்துக் குவலயங் காத் தன: திருக்கிளர் தெய்வப்பிறப்பினர் பலரை உலகினுக் களித்தாய்! -உனதொளி ஞானம் இகிைட நீயிங் கெழுந் தருளுகவே விடுதலை பெறநாம் வேண்டி நின் மறைவு படுமணி முகத்தைத் திறந்தெம் பார்வை முன் வருக நீ! இங்குள மானுடச் சாதிகள் பொரு கள ந் தவிர்த்தமைவுற்றிடப் புரிகநீ! மற்றவர் பகை மையை அன்பினுல் வாட்டுக! செற்றவர் படைகளே மனையிடந் திருப்புக! தாயே! நின்றன் படைத்தன்கசி ராம் மாயக்கண்ணன், புத்தன், வலியசீர் இராமனும் ஆங்கொரு மகமது இணையுற்ற விராவு புகச் வீரரை வேண்டுதும் இந்நாள்! தோன்றினேன்!' என்று சொல்லி வந்தருளும் சான்ருேன் ஒருமுனி தருக.ே எமக்கே மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர் மாசற வணங்கி, மக்கள் போற்றிடத் தகுந்திடுந் திறத்தினர்தமைப் போலின்ருெடு பவித்திர மகளைப் பயந்தருள் புரிகநீ! என்முன் வந்து நீதியின் இயலைச் செம்மையுற விளக்குமொரு சேவகன அருளுகநீ !"
பாரதம் வாழ்ந்திடவும் தேசத்தின் மக்கள் கவி விண்ணப்பம் செய்து கொண்ட மாதிரி, இந்தியநாட்டுக்குப் பவித்திர மகளாகக் கிடைத்தார் துறவுக் கன்னியாம் அக்னெஸ். அன்பின் தெய்வீகமான பணிக்கும் அறத்தின் புனிதமான கடமைக்கும் இந்தியத்தாயின் பொற்பாதங்: களில் தன்னையே முழுமையாகக் காணிக்கை வைத்துவிட்ட கன்னித்துறவி அக்னெஸ், பாட்டுக்கொரு புலவன் கனவு கண்ட விதமாக, ஒரு சேவகளுகவும், ஆமாம், ஒரு சேவகி. யாகவும் ஆகக்கூடிய பொன்னனதொரு நல்வாய்ப்பிற்காக ஏசுநாதரை நம்பிப் பிரார்த்தித்த நிலையிலே, கல்கத்தா வில் லொரெட்டோ கன்னியர் மடத்தில் இணைந்து ஆசிரி யைப் பணி புரிந்த அக்னெஸ் 1931-ல் தெரேசா எனும் பெயரைப் பெற்று, சுமார் இருபதாண்டுக் காலம் புனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/132&oldid=1672022" இலிருந்து மீள்விக்கப்பட்டது