133
மேரி பள்ளியின் ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியை யாகவும் பணியைத் தொடர்ந்து அப்பால், 1946-ல் டார்ஜிலிங் பயணத்தின் போது, "மகளே! ஏழைகளிலும் ஏழைகட்கு இனி நீ பணி செய்வாயாக!' என்னும் கர்த் கரின் அழைப்பை ஆணையாக ஏற்று, கன்னிமடத்தைத் துறக்கவும் முடிவு செய்து, 1948-ம் ஆண்டில் இந்தியப் பிரஜை ஆனர்.
கன்னி தெரேசா, அன்னே தெரேசா ஆகி, கல்கத்தா பெருநகரில் மோதி ஜில் எனும் சிறுசேரிப் புறத்தில் சுதந்தரப் பறவையாகப் பள்ளி ஒன்றைத் தொடங்கிய நேரத்தில், நோபல் பரிசைப் (1912) பெற்ற கீதாஞ்சலி' யின் வரிகள் அவரது அன்பு இதயத்திலே திரும்பவும் திரும்பிப் பார்த்தன: "என் தலைவனே! இதுவே என் வேண்டுகோள்: எனது உள்ளத்தில் இருக்கும் வறுமை யைத் தொலைத்துவிடு. இன்ப துன்பங்களை எளிதில் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை எனக்குக் கொடு. பயனுள்ள வகையில் மக்களுக்குத் தொண்டு செய்யும் நெஞ்சுறுதியை எனக்கு அருள். ஏழைகளைப் புறக்கணிக் காமல் இருக்கவும், ஆணவத்தின் முன்னே அடிபணியாமல் இருக்கவும் கூடிய இதயப் பலத்தையும் எனக்குத் தந்தருள் வாயாக!"
"ஒ...மிஸ்டர் டாகுர்!"
மிக உயர்ந்த மனிதப் பண்பாளராகவும் மிகச் சிறந்த பொதுநலப் பணியாளராகவும் விளங்கிய வங்கக் கவியரசர் டாக்டர் தாகூரின் கீதாஞ்சலி வாசகங்கள் அன்னையின் மனிதாபிமான மனத்தளத்தில் மீண்டும் ஒலிக்கின்றன; எதிரொலிக்கின்றன! .
மெய்மறந்த அன்னை சுயப்பிரக்கினையினை மீட்டுக் கொண்ட நேரத்தில், அப்பொழுது அவரது கையிலிருந்த அந்த வெறும் ஐந்துருபாய் - ஐந்தே ஐந்து ரூபாய் சிரித்தது.