பக்கம்:அன்னை தெரேசா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

 அந்தச் சிரிப்பில் அன்னை விதியைக் காணவில்லைஏசுவின் ஏழைகளைக் கண்டார். ஏழைகளின் ஏசுவைக் கண்டார்! .
21, டிசம்பர், 194 :
அப்போது அன்னேயின் கைவசம் ®೮55ಣ ஐந்து ரூபாய் மட்டுமேதானே?
கல்கத்தாவில் மோதிஜில் சேரிப்பக்கத்தில் காவியாகக் கிடந்த அந்த அறையில் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்து, வாடகையைக் கேட்டபோது, வாடகை மாதத்திற்கு ஐந்து ரூபாய்தான்!” என்று கிடைத்திட்ட அந்தப் பதிலைக்கேட்ட அன்னை அப்படியே மெய்சிலிர்த்துப் பரவசம் அடையலானர். உலகம் உய்ந்திடச் சிலுவை யைச் சுமந்த அன்புக் கர்த்தரின் நற்கருணையை நினைந்து நினைந்து மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணிர் பெருக்கினர். கிறிஸ்தவ சமய வாய்முறை வழிபாட்டில் அன்னேயின் உதடுகளில் ஈரம் சொட்டியது.
கால உருண்டையில் நாட்கள் உருண்டன.
அன்பின் துரதுவராகப் பணிகள் புரிந்துவந்த தெரேசா அன்னையார், 1950, அக்டோபர், 7-ம் நாளன்று, கல்கத்தா வின் கிரீக் தெருவில், கிறிஸ்தவ மதத்தின் நெறிமுறை ஆதாரத்திலும் கற்பு நிலையை உறுதியோடு கடைப் பிடித்தல், ஏழைமையை நெஞ்சுரத்துடன் பின்பற்றுதல், மற்றும் பணிவன்பை வாழ்க்கையில் மேற்கொள்ளுதல் போன்ற உறுதிநிலை நோன்புகளின் வழித்துணையிலும், அன்பின் தூதுவர்கள் என்னும் பெயரிட்டு, அறநெறிப்பணி இயக்கத்தைச் சட்டரீதியாக நிறுவினர்.
இந்திய மண்ணில் அன்னை ஆரம்பித்த இவ்வமைப்பு இன்று (1983) உலகத்தின் முக்கியமான நாடு நகரங்களி லெல்லாம் ஆல்போல் தழைத்து நாளும் பொழுதும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/134&oldid=1672141" இலிருந்து மீள்விக்கப்பட்டது