135
வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெருமையும் பெருமிதமும் கொண்ட இந்தியநாடு ஏழைகளின் நாடுதான்!- ஆனலும், இந்தியாவின் ஏழை மையைப் போக்கிட, வாழ்க்கையின் பல நிலைகளில் பேர் பெற்ற பெரியவர்கள் பலர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அன்றைக்கு எத்தனை எத்தனையோ அன்புத் தொண்டுகளை எத்தனை எத்தனையோ வழி வகைகளிலே செய்தார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்ற நாவுக்கரசரின் வாய்மொழி, வாய்மை மொழியே அல்லவா? "உலகிற்கும் உலக மக்களுக்கும் நன்மை செய்வதொன்றே நமது உன்னத லட்சியமாக அமைதல் வேண்டும்!” என்று அன்று உலகமேடையில் ஞான முழக்க மாக வீரமுழக்கம் .ெ ச ய் ய வி ல் லே யா சுவாமி 'விவேகானந்தர்!
"தாழ்வுற்று, வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்ததாமோர் பாரததே சந்தன்னை வாழ் விக்க வந்த காந்தி மஹாத்மா!' நாடு விடுதலை பெறவும் எல்லோரையும் ஒரே நிறையாக வாழச் செய்யவும் தமது வாழ்நாளையே அர்ப்பணம் செய்தது கதையல்ல; சரித் திரம்1-அன்பு என்பதற்குச் சாதி, மதம், இனம், மொழி, நாடு என்கிற வேற்றுமைகள் எதுவுமே கிடையாது. நீதி நியாயங்களை எதிர்பாராமல் சரணுகதி அடைவதுதான் அன்பின் சட்டமாகும்!" எனவும், "சுயநலமே இல்லாத, அன்புமயமான தொண்டின் மூலமாகவே உணர்ந்தறிய முடியுமென்பதை நான் அறிந்துணர்ந்து கொண்டேன். ஆதவின், தொண்டு செய்யும் மதத்தையே என் மதமாகச் செய்து கொண்டேன். அந்தரங்க சுத்தியுடன் ஊழியப் பணிகள் புரிந்தால், மரணத்திற்குப் பிறகும் கூட, அவை சிரஞ்சீவியாக இருக்கும்; தொண்டு புரிகிறவர்களும் சிரஞ்சீவியாகி விடுவார்கள்! ஆமாம்; தொண்டுக்குத் தொண்டுதான் வெகுமதி!' எனவும் அமர்வாக்குக்