பக்கம்:அன்னை தெரேசா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நிகழ்ச்சிகளை 14-2-1976-ம் நாளில் ஆரம்பித்து வைத்த பாரதப் பிரதமர் திருமதி காந்தி அவர்கள் "இந்நிறுவனம் ஒரு பெண்மணி கண்ட கனவின் நினைவாகும்!” என்று டாக்டர் ஐடா அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத் திஞர்." - இருபதாம் நூற்ருண்டின் விந்தைப் பெண்மணியாகப் பெருமைபெற்ற ஹெலன் கெல்லர் (Helen Keller 1880-1968) கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களிலும் குறைபாடு கொண்டிருந்தாலும் தொடு உணர்வுகள் . மற்றும் நுகர் சக்தி உணர்வுகளின் உதவிகொண்டு, உலகிடை இருளில் ஒளியாக வாழ்ந்து, ஊனமுற்முேர் சமுதாயத்திற்கு அளப்பரிய தொண்டுகள் புரிந்து வாழ்ந்து காட்டியவர் ஆயிற்றே! சான்ருண்மையில் உலகம் போற்ற வாழ்ந்த அம்மையார் புகழுடம்பு எய்திய துயரச் செய்தி கேட்டு, பாரதத்தின் பிரதமர் திருமதி இந்திராகாந்தி இவ்வாறு புகழ்ந்துரைத்தார்: "ஆச்சரியப்படத்தக்க மனத்தின் துணிவினல் மகத்தான சாதனைகளைச் செய்து ஒளிவிளக்காக உலகில் வாழ்ந்து காண்பித்தவர் அம்மையார் ஹெலன் கெல்லர்!’’ உலக நலப்பணிகள் புரிந்த சான்ருேர்களின் வரிசையில் முன்னணியில் அமர்ந்து, அல்லும் பகலும் அயராமல் அன்புப் பணிகள் புரிந்து, திக்கற்ற ஏழைகளின் திக்குத் தெரிந்த ஓர் அன்புத் தேவதை மாதிரி நாம் காண நம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அன்னே தெரேசா ”டாக்டர் ஐடா ஸ்கட்டர் மற்றும் ஹெலன் கெல்லர் அம்மணிகள் பற்றின 'பூவையின் வாழ்வியல் நூல்களை'யும் . மணிவாசகர் பதிப்பகம் தனித்தனியாகவே விரைவில் வெளிப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/138&oldid=736275" இலிருந்து மீள்விக்கப்பட்டது