பக்கம்:அன்னை தெரேசா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

 ஐக்கிய நாடுகள் போன்ற அயல்நாடுகளிலிருந்து அதற்கான புதிய கண்டுபிடிப்பு மருந்துகள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன!” என்ருர் டாக்டர்.
இந்திய மண்ணில் செயற்கரிய செய்து வந்த தெரேசா அன்னே யாரின் அன்புப் பணிகளுக்கு உறுதுணையாக வெளி நாட்டினரும் அவ்வப்போது உதவிகள் பலவற்றைப் பெருமளவில் செய்தனர்.
பங்களாதேஷ் அகதிகளுக்குப் புகலிடம் அளித்து, அன்னே தெரேசா தமது அறப்பணி இயக்கத்தின் வாயிலாக ஆற்றிய நற்பணிகளில் மனத்தைப் பறிகொடுத்த அமெரிக்க ஜனதிபதி அமரர் கென்னடியின் சகோதரர் எட்வர்ட் கென்னடி தமது குடும்பத்தின் அறக்கொடையிலிருந்து பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார்.
பாரதத்தில் அமர்ந்திருந்த ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் தூதுவர் அன்னையைக் கல்கத்தாவில் சந்தித்து நாட்டின் தலைநகரான புதுடில்லியில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நிறுவுவதற்கு ஆவன செய்தார். அவ்வாறு அமைக்கப்பட்ட குழந்தைகள் விடுதியின் தொடக்க விழாவில் பாரதத்தின் பிரதமர் நேரு பெருமையுடன் கலந்து கொண்டார்.
விழாவில் அன்னை அவர்களின் இதயம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசியது : "...அன்புப் பணி என்பது கடலைப் போன்றது; நாங்கள் இப்போது செய்து கொண் டிருக்கும் பணிகளெல்லாம் ஒரு துளி என்பதாகவே நாங்கள் உணர்கிருேம். ஆனால், எங்களுடைய பணித்துளி கடலில் சேராவிட்டால், கடல் போன்ற மிகப் பெரிய அறப் பணிகள் குறைந்துபோய் விடுமே? ஆகவே, அன்புப் பணிக் கடலை உண்மையிலேயே மதிப்படையச் செய்திட, நாம் அனைவரும் தொடர்ந்து அன்புப் பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதே என் விண்ணப்பம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/141&oldid=1672405" இலிருந்து மீள்விக்கப்பட்டது