பக்கம்:அன்னை தெரேசா.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


1964-ம் ஆண்டில், போப் ஆண்டவர் பால் அவர்கள் (Pope Paul VI)பம்பாயில் (The International Eucharistic Congress)கலந்து கொள்ள வருகை தந்தபோது, அப்போது இந்தியக் குடியரசின் தலைவரான மாபெரும் தத்துவ ஞானியான டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன் அவரை வரவேற்ருர்.
அமெரிக்க நாட்டுச் சீமான் ஒருவர் அன்புடன் பரிசளித்த விலைமதிப்பு மிகுந்த காரில் பம்பாய் வீதிகளில் பவனி வந்தார் போப் ஆண்டவர்; அன்னையின் அறப்பணி நிறுவனங்களுக்கும் விஜயம் செய்தார். "அன்னையே உங்கள் அன்புப் பணிகள் வெகு அற்புதமானவை! உண்மை தான் : ஏகபிரானே அற்புதமானவர்தான்!” என்று அன்னையை ஆண்டவன் ஏசுவின் பெயரால் ஆசீர்வதித்தார். போப் ஆண்டவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னல், தமக்கு அன்பளிப்பாய்க் கிட்டிய திறந்த அமைப்புடைய அத்தக் காரை தெரேசா அன்னைக்குத் தமது அன் பின் பரிசிலாக வழங்கினர். பரிசுச்சீட்டு குலுக்கலின் மூலம் அழகான அந்த வாகனம் அன்னையின் அன்புப் பணிகளுக் கென ஈட்டித் தந்த தொகை ரூபாய் நாலரை லட்சத் திற்கும் கூடுதலாக அமைந்தது.
மனிதத் தன்மை நிரம்பிக் கீர்த்தி அடைந்த டாக்டர் கோஷ் மனிதாபிமானத்துடன் அன்னைக்கு டம்டம் விமான நிலையத்தருகில் அளித்த பெரிய மன மன நோய்க்கு ஆளான குழந்தைகளின் நலனைக் கட்டிக் காக்க உதவிற்று.
அன்னேயின் பொதுநலச் சேவைக்கான தேவைகள் ஆண்டவனுக்குப் புரியும்.
'ஹிந்துஸ்தான் லிவர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் திரு. தாமஸ் ஒருமுறை, அன்னையைச் சந்தித்து, தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/142&oldid=1672410" இலிருந்து மீள்விக்கப்பட்டது