பக்கம்:அன்னை தெரேசா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

பம்பாய்ச் சொத்தை அன்னை நடைமுறைப் படுத்திவத்த உலகமக்கள் தொண்டுக்காக எழுதிக் கொடுத்தார்.

தியாக மனம் கொண்ட நிதி மிக்க நல்ல மனிதர்கள் வழங்கிய நன்கொடைகளையும் அன்னே மறுப்பது கிடையாது தான்!

ஜான் ஸ்ட்ரீட் (John Street) என்னும் பெயர் சூடிய ஆன்திரேலியச் செல்வந்தர் அன்னையின் பொது நலச் சேவைகளின் நன்றிக்கு அடையாளமாக 50,000 டாலர் களுக்கான (சுமார் நாலரை இலட்ச ரூபாய்) காசோலை ஒன்றை அன்னையிடம் சமர்ப்பித்தார்; அத்துடன் அவர் திருப்தி அடையவில்லை. சாவைத் தரிசிக்கக் காத்திருந்த ஏழைகளின் இல்லத்தில் கொஞ்ச காலம் தங்கியிருத்து, உடன் உழைக்கும் பரிசுத்தச் சகோதரர்களோடு இணைந்து அன்புப் பணிகளையும் அச்சீமான் செய்தார்.

கல்கத்தாவில் அமைந்திருந்த ஆங்கிலேயக் கம்பெனி ஒன்று, பிரம்மாண்டமானதொரு கட்டடத்தை அன்னையின் இயக்கத்திற்குச் சன்மானமாகக் கொடுத்தது. அது ‘பிரேம்தன்’ (Prem Daan) எனப் பெயர் பெற்றது; புதிதெனத் திட்டமிடப்பட்ட நடைமுறைச் செயற் பணிகள் பெண்குலத்தின் மேன்மையைப் பிரதானமாய்க் கொண்டு இயங்கலாயின.

நாமக்கல் கவிஞரின் தல்வாக்குப் பவிதமடைய வேண்டும்!—

“தாழ்ந்தவரென்போர் இங்கே இல்லை;
தரித்திரம் நமக்கு இனிப் பங்கில்லை!”

உலகத்தை உண்டாக்கியவன் ஆண்டவன்தான்; சம தருமப் பாவனையில் இயங்கக்கூடிய அவனது படைப்பில், மனித உயிர்களும் சேர்த்திதான்; ஆலுைம், மனிதர்களிடையே உண்டாக்கப்படுகின்ற உயர்வுக்கும், தாழ்வுக்கும் இதே மனிதர்கள்தாமே காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/143&oldid=1673010" இலிருந்து மீள்விக்கப்பட்டது