பக்கம்:அன்னை தெரேசா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

 வருகிறது; சரித்திரத்தில் வாழ்ந்து வரும் தமிழகத்தில் காலத்தை வென்று நிற்பவள் அறச்செல்வி மணிமேகலை. மற்றுமொரு கன்னித்துறவி மணிமேகலையாக, நாம் கான உலக அரங்கில் அன்பின் ஒளியாகப் பொலிந்து வருகின்ற அன்னே தெரேசா அவர்களின் அன்புப் புரட்சிக்கும், அறப் புரட்சிக்கும் என்றென்றும் உதாரணம் தரக்கூடிய நிரந்தரமான உதாரணமாக அமைந்துள்ள அன்புப் பணி அமைப்பின் கிளை நிறுவனங்கள், பெற்ற தாயென்று கும்பிடப்படும் தமிழ்த் திருநாட்டின் தலைநகரான சென்னை வில் இராயபுரத்திலும், தியாகராயநகர் மற்றும் சைதாப் பேட்டையிலும், அப்பால், சென்னையை அண்டியிருக்கும் எண்ணுசரிலும் பல்லவப் புகழ் நிலைத்த காஞ்சியிலும், சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலாம் மதுரையிலும், தெ ா ழி ற் கே ந் தி ர ம் கோவையிலும், கோட்டைநகர் வேலூரிலும் செயலாற்றி வருகின்றன. அறம் வளர்க்கும் தமிழ் மண்ணிலே அன்பை வளர்த்த ஆளுதை இல்லங்கள் மற்றும் சேவாதளங்கள் போன்ற பொதுப் பணி மன்றங்களுக்கு மத்தியில் அன்னையின் மக்கட் பணிகளும் தொடர்ந்து வருகின்றன!
அன்பே ஆண்டவன்!
அன்பே ஆண்டவனின் குழந்தைகள்!
அன்புதான் உலகம்!
எம்மதமும் சம்மதம் தெரிவிக்கும் இயற்கைத் தத்துவங்கள் இவை.
இத்தத் துவங்களின் நியதிக் கோட்பாடுகளின் தாயக மாகவும், யாகசாலையாகவும் பேரன் பின் உலகப் பேரொளியாக விளங்கி வரும் தெரேசாவின் அன்புப் பணி இயக்கத்தின் மைய அமைப்புக்கள் அனைத்து உலக நாடுகளிலும் பொதுநல அன்புத் தொண்டுகள் புரிந்து வருகின்றன. அன்பை இழந்த அைைதகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அபலைகள், இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/146&oldid=1674208" இலிருந்து மீள்விக்கப்பட்டது