பக்கம்:அன்னை தெரேசா.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

பிறிதொரு தருணத்தில், ஆக்ரா நகரில் உருவான சகோதரிகள் சேவை இல்லத்திற்கு ஐயாயிரம் ரூபாய். அவசியமாக இருந்தது. அப்போது, அன்னையிடம் பணம் ஏதுமே இல்லை. அந்நேரத்தில்தான், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புக் கொண்ட ரேமன் மாக்ஸ்ேஸே பரிசில் (Ramon Magsaysay) அன்னையை நாடி வந்தது!- இது மாதிரி, அன்னையின் அன்புச் சேவைக்கு எது எப். போது தேவையோ, அது அப்போது கர்த்தரின் கடாட். சத்தால் தாகை அன்னையைத் தேடி வருவது அன்ருட. நிகழ்ச்சியாகும்!
அன்னையின் தெய்வத் தி ரு ப் பணி க ள் குறித்து "நாங்கள் ஏசுவிற்காக அன்பு செய்கிருேம்!” என்ற நூலை எழுதியதுடன், அன்னையின் அன்புச் சபையினருக்கு ஆன்ம ஆலோசகராகவும் நீண்டகாலமாகப் பணியாற்றும். புனிதத் தந்தை லிஜோலியின் கருத்து இது:<br. தொடக்கம் முதலாகவே அன்னேயின் தெய்விகப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய தந்தை வேனெக்சம் அடிகள் (Van Exem S.J.) தமது அன்பான கண் ளுேட்டத்தில் உலகத்தின் அன்புக்கு மாதாவான டாக்டர் தெரேசா அவர்களை இவ்வாறு தரிசிக்கிருர்: "அன்னை தெரேசா இறைவன் இயேசுவுக்காக எதையும் செய்வார்; முடியாத எக்காரியத்தையும் முடித்தே தீருவார்; சீழும் இரத்தமும் வடியும் குஷ்டரோகிகளின் ரணங்களையும் நோயாளிகளின் அசுத்தங்களையும் எவ்விதமான அசூயை யும் இல்லாமல் செபித்துக் கொண்டே தம் கைகளாலேயே கழுவிச் சுத்தப்படுத்தி மகிழ்வது அவரது ஆத்மார்த்த மான சிறப்புக் குணம்! - ஒரு சமயம், வாதநோயினல் அவதிப்பட்ட ஒரு குழந்தைய்ை அன்புடன் தடவிக் கொடுத்ததுதான் தாமதம், உடனே அக் குழந்தை தன் நோயையும் மறந்து தன் தாயின் மடியிலிருந்து இறங்கி நம் அன்னையுடன் அன்பு நடைபோட ஆரம்பித்து விட்டது!-இது ஒரு பெரிய அதிசயம் அல்ல!-ஐந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/151&oldid=1674586" இலிருந்து மீள்விக்கப்பட்டது