பக்கம்:அன்னை தெரேசா.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ரோட்டமானதொரு நிகழ்ச்சியால் உறுதிப் படுத்துகிருர் . ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் மகுடமிட்ட தமது மகுடப் படைப்பில் கவித்திலகம் எடுத்துக்காட்டியுள்ள கதை ஒன்றின் எடுத்துக்காட்டு இது:
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒருவர் வந்தார். "நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள். சிவன் என்றும் சொல்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரங்கள்தாம் பூரீராமபிரானும் பூரீகிருஷ்ண பரமாத்மாவும் என்ப தாகவும் கூறுகிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடி வங்கள் எதற்கு? ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று கேட்டார்.
அதற்குப் பகவான் விடையளித்தார்: "நீங்கள் ஒருவர் தான். ஆனல், உங்களுடைய அப்பாவுக்கு மகன்; மகனுக்கு அப்பா; மனைவிக்குக் கணவன்; மாமனருக்கு மாப்பிள்ளை; மாப்பிள்ளைக்கு மாமனுர்; மைத் துனனுக்கு மைத்துணன் பாட்டனுக்குப் பேரன்! பேரனுக்குப் பாட்டன். உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஆண்டவனுக்கு இருக்கக் கூடாதா, என்ன?”
தெய்வம் ஒன்றே ஒன்றுதான்!-வடிவங்களும் அவ தாரங்களும்தான் வேறு வேறு-வெவ்வேறு!
ஈசன்!
ஏசு!
நபி!
ஆக, எம்மதமும் சம்மதமும் தெரிவிக்கும் அன்புதான் தெய்வமாகவும் உலகிடைக் கொண்டாடப்படுகிறது.
அன்புவாழ, மக்கள் வாழ்வார்கள்.
மக்கள் வாழ, அமைதி வாழும்.
அமைதி வாழ, உலகம் வாழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/156&oldid=1674846" இலிருந்து மீள்விக்கப்பட்டது