161
முதல் மகளாகப் பிறந்த அக்னெஸ் வினத் தெரிந்த நாள் முதலாகவே ஆண்டவனின் அருட்கொடையாக மனிதாபி மானம் நிரம்பப் பெற்றவளாக வளர்ந்து, கன்னி ஆன வேளையில், ஏழைகளில் ஏழைகளுக்கு அன்புத் தொண்டு புரிய வேண்டுமென்ற ஆர்வத் தூண்டுதலும் துடிப்பும் பெற்று, அந்த மன எழுச்சியையே தன்னை ஆண்ட ஏசு ஆண்டவனின் கட்டளையாகவும் மதித்து, பிறந்த மண்ணைத் துறந்து இந்திய மண்ணே மிதித்து, தனது லட்சியப் பயணத்தில் தெரேசா என்னும் புதிய பெயர் பெற்று, į #ffff #5 அன்னையின் தவப் புதல்வி ஆகி, பின் அன்புக்கு: அன்னையாகவும் ஆனதெல்லாம் கதை அல்லவே?
அன்புக்கு ச் சரித்திரம் உண்டு.
அன்னைக்கும் உண்டு சரித்திரம்.
உலகம் சமாதானத்திற்கான நோபல் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியப் பெண் அன்னை தெரேசா என்பதால், நமது இந்தியத் தாய்நாடு அன்று பெருமையாலும் பெருமிதத் தாலும் உலக அரங்கில் ஆனந்தப் பள்ளுப் பாடவில்லையா?
அகில உலகத்திலும் அன்பிற்கு ஒர் அன்னையாக, ஒரே ஓர் அன்னையாக விளங்கி, கடையரினும் கடையருக்கான அன்பு நலப்பணிகளே உலகம் தழுவிய இலக்கோடு அன்பின் துரதுவர்கள்' எனப்படுகின்ற தமது அன்புப்பணி இயக்கத்தின் வழியில் கடந்த முப்பது ஆண்டுகட்கும் மேலாகவே கடையரினும் கடையருக்கான அன்பு நலப் பணிகளே நடைமுறைப்படுத்தி வரும் கண்கண்ட தாய்த் தெய்வமான புனிதை தெரேசா விளங்குகிருர், நித்த நித்தம் தேவன் இயேசுவின் பெயரால் ஏழைகளில் ஏழை. களுக்கு உகந்த அறத்தின்பாற்பட்ட அன்புத் திருப்பணி களிலே, நித்த நித்தம் ஏசுநாதரையே தரிசனம் செய்து அமைதியும் ஆறுதலும் அடைகிருர்கள் அன்னே!
அன்புச் சங்கதி ஒன்றை மக்களுக்கு அடிக்கடி அன்ன நினைவுகூர்ந்து, நினைவு படுத்துவது உண்டு :