பக்கம்:அன்னை தெரேசா.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வரவும், அவர்களேத் தெய்வத்திடம் அழைத்துச் செல்லவும் நாம் முயற்சி செய்யவேண்டும்!
மேற்கு வங்கத்தில் இயங்கும் அன்னையின் அன்பியக்கம் சார்ந்த தொழு நோயாளிகள் இல்லங்களுக்கு ஆண்டு தோறும் ஸ்விட்ஸர்லாந்து நாட்டிலிருந்து தொழுநோயைக் குணப்படுத்தவல்ல லாம்ப்ரன்’ குழாய் மாத்திரைகள் சுமார் 8,00,000 அளவில் வந்து சேர்கின்றன.
வளர்ந்து வரும் மூன்ருவது உலக நாடுகளில் வளர்ந்து வரும் வறுமையைத் தடுத்தாட்கொள்ள வேண்டி, அன்னே அவ்வப்போது அன்புக்குத் துரது சென்று உலகத்தைச் சுற்றி வந்ததால் கைமேல் பலகைக் கிடைத்த அன்பின் காணிக்கைகள் அன்பைப் போன்று உயர்ந்தனவாகவே அன்றும் அமைந்தன; இன்றும் அமைகின்றன; நாளேயும் அமையும்!
மறுபடி கணக்குப் போடுகிறது அன்பு:
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு 1981-ல் விஜயம் செய்த போது, ஜனதிபதி ரொனல்ட் ரீகனை வெள்ளை மாளிகையில் சந்திந்தார் அன்ன. உடன், நியூயார்க் நகரில் ஹார்லெம் மாவட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கெனவும் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்காகவும் புதிதான அன்புப் பணி இல்லம் ஒன்றை ஆரம்பித்தார்; திரும்பு காவில், பொதுவுடைமை ஆட்சிக்கு உடன்பட்ட ஜெர்மானிய ஜனநாயக் குடியரசிலும் (GDR) அன்புப் பணிமனே திறக்கப்பட்டது! - பொதுவுடைமைத் தத்துவம் ராசாங்கம் நடத்தும் யூகோஸ்லாவிய நாட்டில், அன்னை யின் பிறந்த மண்ணில் அன்பின் துரதுத் தொண்டுகள் ஏற்கனவே ஆரம்பமாகியிருந்தனவே!
பெரும் அளவிலான அன்பும் ஓரளவுக்காகிலும் உணவும் கிடைக்கவேண்டுமேயென்று ஏங்கித் தவிக்கும் மக்கள் மலிந்த போலந்திலும், மக்கள் குடியாட்சிச் சீனவிலும் அன்புப்பணி இயக்கத்தின் அமைப்புக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/163&oldid=1677424" இலிருந்து மீள்விக்கப்பட்டது