165
மெய்ம்மறந்த நிலையில் அன்னை தெரேசா அன்று பேசிய பேச்சுக்கள் மெய் உணர்ந்த நினைவில் இவ்வாறு தொகுக்கப்படும்:
"எங்கள் இயக்கத்தின் அன்பு சால் பணிகள் நாளும் பொழுதும் இயேசுவிற்காகவும், இயேசுவினலும் இயங்கு கின்றன; மனித குலம் சார்ந்த ஏழைகளிலும் ஏழை களான மக்களுக்கு அன்பு செய்திட வேண்டுமென்று ஆண்டவன் ஆணே இட்டார். எங்கள் அமைப்பு பிறந்தது; வளர்ந்தது; வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏழைகள் எங்கேயோ இன்னமும் நம்பிக்கையோடு உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிரு.ர்கள்’ என்கிற நடப்பு உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. அன்பு தெய்வீகமானது; அது வாழும்; வாழ்த்தும்!’ என்னும் உலக நியதிக்கோட்பாடு இப்பொழுது உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுப் பிரகடனப் படுத்தப்படுகிறது. ஏழை களின் சிரிப்பில் இறைவன் வாழ்ந்தார்; வாழ்கிருர்; வாழ்வார்!"
ஒரு நினைவூட்டல் நிகழ்வு:
அன்னே தெரேசாவைப் பற்றியும் அவர்களது அன்புப் பணி அமைப்பின் அறநெறிப் பணி முறைகளைப் பற்றியும் பி. பி. ஸி. (B. B.C.) நிறுவன அமைப்புக்காகத் தொலைக் காட்சிப் படமொன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுப் பூர்வாங்கமான ஏற்பாடுகளையும் செய்து முடித்தார் மால்கம் மக்கரிட்ஜ். அன்னை சம்மதம் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதினர்.
அன்னை தெரேசா பற்றின படப்பிடிப்பிலே, அன்னை தவருமல் கலந்து கொள்ளக்கூடிய பொதுவான புனிதப் பிரார்த்தனை பல்வேறு "நிேலைகளிலும் பலதரப்பட்ட கோணங்களிலும் படமாக்கப்பட்டு, நல்ல ஆரம்பமாகவே அமைந்தது. ஆஹா ஆடவரும், பெண்டிரும் மழலைகளு மாகப் பொது மக்கள் அன்னையின் அன்புக் கரங்களைத்