பக்கம்:அன்னை தெரேசா.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 நீண்ட நேரம் வரை நீளுகின்றன. ஏழைமையையும் ஏழைகளின் கஷ்ட நஷ்ட வாழ்வையும் பிரதிபலிக்கும் வகையில் இவர்களது உணவும் உறைவிடமும் எளிமை மிகுந்தவையாக அமைகின்றன. துறவுக்கன்னியாம் தெரேசாவை ஏழை எளிய உலகம் 'அன்னே"யென அன்புப் பாசத்தோடு அழைக்க ஆரம் பித்தது. அன்னை, தமது அன்பின் தொண்டர்கள்’ என்னும் படியான சகோதரிகளின் பணி அமைப்பின் தொடர்பில் 3/siri I & & Gassr;orff gait fou (Brothers of Missionaries of Charity) ஒன்றையும் 1963 மார்ச் 25 அன்று சேசு சபைக் குரு சோதரர் ஆண்ட்ரு தலைமையில் ஏற்படுத்தலாஞர். அன்புநலப் பணியாளர்கட்கு அன்னையின் அன்புக் குரல்தான் வேதவிதி - வேதவாக்கு! - இறையன்பு, அமைதி, மக்கள் அன்பு, தியானம், பரிசுத்தம் - முக்கரண சுத்தி, அர்ப்பணம், பணிவுடைமை, துன்பத்தில் பங்கு, பணியில் ஆறுதல், மகிழ்வு போன்ற நிலைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணி, தேவ அன்னை மற்றும் தேவ மைந்தனுக்கு விசுவாசமாக இவர்கள் நடப்பார்கள். புனித சகோதரிகளும் அன்புச் சகோதரர்களும் மேற் கொள்ளும் மறைமுறை ஆதாரத்தின் பாற்பட்ட் அறநெறி சார்ந்த அன்புப் பணிகளில் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூக நலப்பணி ஆகியவையும் உள்ளடங்கும். 'கடைப்பட்ட என்னுடைய சகோதர-சகோதரிக்கு நீங்கள் அன்பு செய்யும் போதெல்லாம் அந்த அன்பை, நீங்கள் எனக்கே செய்தீர்கள்!' (மத்தேயூ 25:34.40) அனுதை இரட்சகன் ஆண்டவன்! இயேசு வாழ்கிருர்! அ. தெ. - 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/169&oldid=736309" இலிருந்து மீள்விக்கப்பட்டது