172 பிலும் விதி முறை அடிப்படையிலும் உருவாகி நிறுவப் பட்டு, 'அன்பின் தொண்டர்கள்’ என்னும் உலகறிந்த பிரதான அமைப்புடன் இணைக்கப்பட்டுச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எல்லா மதங்களையும் எல்லா இனங்களையும் சார்ந்த ஏழை மக்கள் உலக நாடுகளிலே அங்கங்கே சிதறிச் சின்ன பின்னமாகிக் கிடக்கின்ருர்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஏழைகளுக்கு, அதாவது, ஏழைகளிலும் ஏழைகளுக்குத் தன்னலம் கடந்த முழுமனத்துடன் சேவை செய்வதுதான் சங்கத்தின் உயிர் நிலையான இலட்சியம்; இவ்வமைப்பில், உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்கூட அங்கம் வகிப் பார்கள்!- ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைத் தரிசிக் கின்ற தியாக நலப் பணியே, அரிதான தங்களது மானுடப் பிறவிக்குக் கிடைத்த நல்லபயன் எனவும் இவர்கள் கருதி, அன்பின் துTதுவர்களாகவும் தொண்டர்களாகவும் பணி புரிகிரு.ர்கள்! “syārl%ir 5 Tgūauffésir’’ (Missionaries of Charity) அமைப்பின் தலைமை நிலையமான அன்னை இல்லம்’ (The Mother House) கவின் மிகு கல்கத்தா நகரில் ஆச்சாரிய ஜகதீஷ் போஸ் சாலையில் இயங்கி வருகிறது. அன்னை இல்லத்திலேதான். அன்னை தெரேசாவும், முந்நூற்றுக்கும் மேற்பட்ட அன்னேயின் சகோதரிகளும் வசிக்கிருர்கள். - பொதுத்தன்மை வாய்ந்த அன்புத் துாதுப்பணிகள் தினமும் விடியல் வேளையில் நான்கு மணிக்கே ஆரம்பம்ாகி விடுகின்றன. துயில் கலந்து, கண் திறக்கும் அன்ன காலக் கடன் முடித்து, நீராடி, நீலக்கரைப் புடவை தரித்து, ஜபம் செய்து, சிலுவைக் குறியிட்டுப் பிரார்த்தனே செய்ததும்,
பக்கம்:அன்னை தெரேசா.pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை