175 அங்கேதான், பார்வையாளர்கள் கூட்டம் கூட்ட மாகக் கூடி இருப்பார்கள். அன்பே வடிவமாக அமைந்: திட்ட அன்னைத் தெய்வத்தைத் தரிசனம் செய்வதற் கென்று கூடியிருக்கும் மக்களின் தொகைதான் வழக்க மாக மிஞ்சிக் கிடப்பது வழக்கம். அவரவர்களின் சொத்தப் பிரச்சினைகளின் காரணமாக அன்னையைச் சந்திக்கத்தவித்தவர்களும் கூட்டத்திலே கலந்து இருப் பதும் சகஜந்தான்! . . மனம் ஒன்றிய சத்திப்புக்களும் பேச்சு க் களும் தொடரும். . r . தெரேசா அன்னை எண்ணிப்பார்க்கிருர்! எல்லாமே சொப்பனம் போலவே தோன்றியது. அன்னே தெரேசா இன்பப் பெருமூச்செறிகின்ருர்: "அறநெறி சார்ந்திட்ட இந்த அன்புப்பணி அமைப்பினே, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்துக் காப்பது போலவே, நான் உருவாக்கி வளர்த்துக் காத்திட எத்துணை பாடுபட்டேன்! - எத்தனை தொல்லைகள் அனுபவித்தேன்? எடுத்த காரியம் வெற்றியடைய நான் எத்தனே பெரிய மனிதர்களைச் சந்தித்தேன்? - அவர்களைச் சந்திக்க எத்தனே நாழி காத்துக்கிடந்திருக்கிறேன்? அன்புப் பணி இயக்கம் என்கிற குழந்தை இன்று வளர்ந்து ஆளாகி, விட்டது! எல்லாமே கர்த்தரின் ஆகிதான்!” ‘. . . . . அன்று : 1983, மே மூன்ருவது வாரத்தில், அன்னேயைக் கண்டு மகிழக் காத்திருந்த பெரிய புள்ளிகளான பார்வையாளர் களிலே, உலகப் புகழ் படைத்த பெருஞ்செல்வந்தக் குடும்பங்களில் ஒன்ருன பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம் கண்டிருந்தார்; கூட்டத்தில், மேலே நாட்டைச் சார்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரும், பாராளுமன்றத்தின் பழைய அங்கத்தினரும் கலந்திருந்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை